Published:Updated:

விராட் கோலி

விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

விராட் கோலி

Published:Updated:
விராட் கோலி
பிரீமியம் ஸ்டோரி
விராட் கோலி
விராட் கோலி

1988 நவம்பர் 5-ம் தேதி, டில்லியில் பிறந்தார் விராட் கோலி. இவரது தந்தை பிரேம் கோலி, ஒரு வழக்கறிஞர். தாயார் சரோஜ் கோலி. அக்கா, அண்ணா என கோலிக்கு உடன் பிறந்தவர்கள் இருவர். 3 வயதிலேயே கிரிக்கெட் மீது ஆர்வம். தந்தை பந்துவீச, பிளாஸ்டிக் பேட் மூலம் விளையாடியதே விராட்டின் முதல் கிரிக்கெட் அனுபவம்.

விராட் கோலி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

படிப்பில் சுட்டியானாலும், கிரிக்கெட் மீது மிகுந்த ஈடுபாடு. 1998-ம் ஆண்டு, வெஸ்ட் டில்லி கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்தார். பயிற்சியாளர் ராஜ்குமார் ஷர்மாவிடம் முறையான கிரிக்கெட் பயிற்சியைத் தொடங்கியபோது, கோலியின் வயது 9 மட்டுமே.

விராட் கோலி

2002-ம் ஆண்டு, டில்லி U-15 அணியில் இடம்பெற்ற விராட், ‘பாலி உம்ரி கர் டிராபி’யில் விளையாடினார். பங்கேற்ற முதல் தொடரிலேயே அதிக ரன்கள் குவித்த வீரரானார். அடுத்த ஆண்டு, டில்லி U-17 அணியில் சிறப்பான ஆட்டத்தைத் தொடர்ந்ததால், 2006-ம் ஆண்டு இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட U-19 இந்திய அணியில் இடம்பெற்றார்.

விராட் கோலி

கோலியின் கிரிக்கெட் வாழ்க்கையில், தந்தையின் பங்களிப்பு மிகப்பெரியது. தன் மகன் எப்படியும் சாதிப்பான் என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்யத் தயாராக இருந்தார்.

விராட் கோலி

2006-ம் ஆண்டு, கர்நாடகா - டில்லி அணிகள் மோதிய ரஞ்சி போட்டி... கோலியின் கிரிக்கெட் பயணத்தில் பெரும் திருப்புமுனை. அந்தப் போட்டியின் இரண்டாம் நாள், 5 விக்கெட்டுகளை இழந்து ஃபாலோ-ஆன் நோக்கி தத்தளித்தது டெல்லி அணி. அணியைக் காப்பாற்ற முயற்சி செய்தார் விராட். அன்றைய ஆட்டம் முடியும்போது, அவுட் ஆகாமல் 40 ரன்கள் எடுத்திருந்தார். அடுத்த நாள் காலை... விராட் கோலியின் தந்தை இறந்துவிட்டார் எனச் செய்தி வருகிறது. கோலி பேட்டிங் செய்ய வரமாட்டார் என நினைத்திருக்க, ஆட்டம் தொடங்குவதற்கு சில நிமிடங்கள் முன்பு வந்தார். தன் அணியைச் சரிவிலிருந்து காப்பாற்ற, தன் தந்தையின் இழப்பையும் தாண்டி களம் இறங்கினார் 18 வயது இளைஞன். 238 பந்துகளில் 90 ரன்கள் குவித்து ஃபாலோ-ஆன் தவிர்த்தார்.

விராட் கோலி

தந்தையின் மறைவுக்குப் பிறகு, கிரிக்கெட் மட்டுமே எல்லாமுமாக மாறியது விராட்டுக்கு. U 19 இந்திய அணியின் கேப்டனாக உயர்ந்தார். 2008 ஐசிசி U 19 கிரிக்கெட் உலகக் கோப்பையை வென்று, சரித்திரம் படைத்தது கோலி தலைமையிலான இந்திய அணி.

விராட் கோலி

2008-ம் ஆண்டு, ஐ.பி.எல் தொடர் அறிமுகமானது. முதல் தொடரில், ‘பெங்களூரு ராயல் சாலன்ஜர்ஸ்’ அணிக்காக விளையாடினார் விராட்.

விராட் கோலி

18.8.2008... கோலியின் கனவுகள் நனவான நாள். சச்சின், சேவாக் போன்ற முன்னணி வீரர்கள் இல்லாத நிலையில், இலங்கைக்கு எதிரான தொடரில் இந்திய தேசிய அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார். இந்திய அணியின் நீல நிற உடை அணிந்து முதன்முறையாக களம் இறங்கினார்.

விராட் கோலி

2011 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் சதம் அடித்தார். உலகக் கோப்பை அறிமுகப் போட்டியிலேயே சதம் அடித்த முதல் இந்திய வீரர் இவரே. இந்தத் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றது இந்தியா.

விராட் கோலி

ஒரு நாள் போட்டிகளில் தொடர்ந்து அசத்திய கோலி, டெஸ்ட் போட்டிகளில் தடுமாறினார். 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான அறிமுக டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடாததால், அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

விராட் கோலி

2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில், விராட்டுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைத்தது. சீனியர் வீரர்கள் தடுமாற, அடிலெய்டில் சதம் அடித்து தன்னை நிரூபித்தார்.அந்தத் தொடரில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் எடுத்தார்.

விராட் கோலி

2014-ம் ஆண்டு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது தோனி ஓய்வுபெற, இந்திய அணியின் கேப்டன் பொறுப்பு வந்தது. ‘முடியாது’ என்பதை ‘முடியும்’ எனச் செய்துகாட்டுவதே விராட் ஸ்டைல். ஒரு நாள், டெஸ்ட், டி-20 கிரிக்கெட்டின் தவிர்க்கமுடியாத பேட்ஸ்மேனாக முன்னேறினார்.

விராட் கோலி

பாராட்டுகளும் விமர்சனங்களும் மாறி மாறி வரும்போதும், அதைக் கையாள்வதில் விராட் கில்லி. தன் மீதான நம்பிக்கை விராட்டுக்கு என்றும் குறைந்ததில்லை. இதுவே, அவரை வலிமையான கிரிக்கெட்டராக உருவாக்குகிறது.

விராட் கோலி

எதிரணியின் மிரட்டலுக்கு அஞ்சாத விராட், சேஸிங்கில் கிங். தன்னுடைய ஆட்டம் எப்படி இருக்க வேண்டும் என்பதை முடிவுசெய்து தெளிவாக எதிர்கொள்வார். விராட்டின் அதிரடி, முக்கியப் போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற உதவியுள்ளது.

விராட் கோலி

2017 ஜனவரியில், ஒரு நாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.

விராட் கோலி

அர்ஜூனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா ஆகிய விருதுகளால் விராட் கோலியை இந்திய அரசு கெளரவித்துள்ளது.

விராட் கோலி

கோபக்காரன், கேப்டன்ஷிப்பில் சொதப்பல் என்கிற குற்றச்சாட்டுகளுக்குத் தனது சாதனைகளாலே பதில் சொல்வார். சச்சினுடன் ஒப்பிட்டுப் பேசுவது குறித்து,  “சச்சின் எனது ரோல் மாடல். அவரால்தான் கிரிக்கெட் விளையாட தொடங்கினேன். அவரோடு ஒப்பிடாதீர்கள்” என்கிறார். சிறுவனாக இருந்தபோது நெஹ்ரா கையால் பரிசு பெற்றவர். பின்னாளில், நெஹ்ரா இருக்கும் அணியின் கேப்டனாக உயர்ந்தார்.

விராட் கோலி

கடந்த 10 ஆண்டுகளில், விராட்டின் கிரிக்கெட் மெருகேறிக்கொண்டே உள்ளது. வெற்றி தோல்வி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு போட்டியிலும் ‘பெஸ்ட்’ கொடுக்கும்  விராட், இந்திய அணியின் ஆகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களுள் ஒருவர் என்பதில் நோ டவுட்.

விராட் கோலி
விராட் கோலி

விராட்டின் சாதனைகள் அப்டேட் செய்யப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அந்தப் பட்டியல் நீண்டது. அடுத்தமுறை விராட்டை பற்றி எழுதுவதற்குள், வேறொரு சாதனையைத் தடம் பதித்திருப்பார் இந்த வீராதி வீரன்.

-கார்த்திகா ராஜேந்திரன்