

மொகாலி: மொகாலியில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணியிடம் தோல்வி அடைந்த பஞ்சாப் அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
மொகாலியில் நடந்த 59வது லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ்- கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின. டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் ஹைதராபாத்தை பேட் செய்யும் படி அழைத்தது. இதன்படி பார்த்தீவ் பட்டேலும், ஷிகர் தவானும் இன்னிங்சை தொடங்கினர்.
தவான் 15 ரன்களில் வெ ளியேற, இதன் பின்னர் பார்த்தீவ் பட்டேல் ஒருபுறம் போராடினார். ஆனாலும், மறுபுறம் விஹாரி (5), கேப்டன் கேமரூன் ஒயிட் (10), சமந்த்ராய் (0) ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினர். டேரன் சமியை (0) பியுஷ் சாவ்லா வெளியேற்றினார்.
இதன் பின்னர் பார்த்தீவ் பட்டேலுடன் ஜோடி சேர்ந்து ஓரளவு ஒத்துழைப்பு தந்த கரன் ஷர்மா 22 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பின்னர் வந்த திசரா பெரேரா நன்றாக விளையாடினார். பார்த்தீவ் பட்டேல் 61 ரன் எடுத்திருந்தபோது ரன் அவுட் ஆனார். 20 ஓவர் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் சேர்த்தது. திசரா பெரேரா 32 ரன்களுடன் களத்தில் இருந்தார். பஞ்சாப் தரப்பில் சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளும், பியுஷ் சாவ்லா, ஹர்மீத்சிங், அவனா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
151 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய பஞ்சாப் அணி, ஹைதராபாத்தின் புயல்வேக தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறியது. எந்த ஒரு பேட்ஸ்மேனும் பொறுப்புடன் ஆடவில்லை. போமர்ஸ்பாச் எடுத்த 33 ரன்கள் தான் அந்த அணியில் அதிகபட்சமாகும்.
##~~## |