Published:Updated:

`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு!’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo

`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு!’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo
`டிபன்ஸ்தான் ஆடுறான்; உன் மாயாஜாலத்தைக் காட்டு!’ - தோனி ஐடியாவும் குல்தீப்பின் ஆக்‌ஷனும் #Viralvideo

நியூஸிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் தோனி சொன்ன ஐடியாவில் குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

ஆஸ்திரேலேய தொடரை முடித்துக்கொண்ட இந்திய அணி தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி வெற்றிவாகை சூடி 1 - 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. முதலில் பேட்டிங் செய்த நியூஸிலாந்து அணியை குல்தீப் யாதவ் மற்றும் ஷமி இருவரும் திறமையாகப் பந்துவீசி 157 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தனர். பின்னர் களமிறங்கிய இந்திய அணி 34.5 ஓவர்களிலேயே எளிதாக இலக்கை எட்டியது. முன்னதாக பீல்டிங்கின்போது தோனி சொன்ன ஐடியாவில் குல்தீப் யாதவ் விக்கெட் எடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. 

நியூஸிலாந்து வீரர்கள் அனைவரும் அவுட் ஆக, கடைசி விக்கெட்டாக களமிறங்கிய ட்ரெண்ட் போல்ட் நிதானம் காட்ட ஆரம்பித்தார். 9 பந்துகள் பிடித்து வெறும் ஒரு ரன் மட்டுமே எடுத்திருந்தார். அப்போது 38வது ஓவரை குல்தீப் யாதவ் வீச அந்த ஓவரின் கடைசிப் பந்தில், ஸ்டம்புக்குப் பின்னால் இருந்த தோனி, ``அவன் கண்களை மூடிக்கொண்டு தடுத்து ஆடுகிறான். நீ ரவுண்ட் த விக்கெட்டில் வந்து உன்னுடைய மாற்றுப் பந்தை வீசு" என ஐடியா கூற, அதேபோல குல்தீப்பும் பந்துவீசினார். தோனி சொன்னது போலவே அந்தப் பந்தில் எட்ஜ் ஆகி ஸ்லிப்பில் இருந்த ரோஹித் ஷர்மாவிடம் கேட்ச் ஆனது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முன்னதாக இன்னொரு சம்பவத்தையும் தோனி நிகழ்த்தினார். 9 வது விக்கெட்டாக பெர்குசனை அவர் தன்னுடைய பாணியில் மின்னல் வேக ஸ்டம்பிங் மூலம் ஆட்டமிழக்கச் செய்தார். வழக்கம்போல் பேட்ஸ்மேனின் காலுக்கும் க்ரீஸுக்கும் நூலிழைதான் இடைவெளி. இந்த ஸ்டம்பிங் படங்களும் வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.