Published:Updated:

வரலாற்றில் முதல் முறையாக...! - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்த விநோத பிரச்னை

வரலாற்றில் முதல் முறையாக...! - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்த விநோத பிரச்னை
வரலாற்றில் முதல் முறையாக...! - நியூசிலாந்தில் இந்திய பேட்ஸ்மேன்கள் சந்தித்த விநோத பிரச்னை

நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. 

ஆஸ்திரேலேய தொடரை முடித்துக்கொண்ட இந்திய அணி தற்போது நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பாகச் செயல்பட்ட இந்திய அணி வெற்றிவாகை சூடி 1 - 0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலை வகிக்கிறது. ஆஸ்திரேலிய தொடரில் ஒரு நாள் போட்டிகளில் சொதப்பிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடினார். 26 வது அரை சதத்தை பூர்த்தி செய்த அவர், மொத்தம் 75 ரன்கள் எடுத்தார். முன்னதாக ஆறாவது ஓவரின்போது தவான் 10 ரன்களை எட்டியபோது, சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் 5,000 ரன்கள் எடுத்தார்.

இதன்மூலம், 118 இன்னிங்சில் விளையாடி வேகமாக 5,000 ரன்களைக் கடந்த 2-வது இந்திய வீரர் என்ற பெருமையையும் சர்வதேச அளவில் குறைந்த இன்னிங்சில் 5,000 ரன்களைக் கடந்த 4-வது வீரர் என்ற பெருமையையும் படைத்தார். இந்தப் பட்டியலில் இந்திய கேப்டன் விராட் கோலி இந்திய அளவில் முதலிடத்திலும், சர்வதேச அளவில் இரண்டாம் இடத்திலும் உள்ளார். இந்தப் போட்டியின் பத்தாவது ஓவரின்போது இந்திய அணிக்கு வித்தியாசமான அனுபவம் ஒன்று ஏற்பட்டது. பத்தாவது ஓவரை தவான் எதிர்கொண்டிருந்தார். அப்போது மைதானத்தின் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. 

இதனால் பந்தை எதிர்கொள்ளும்போது கண்கள் கூசுவதுபோல் இருந்ததால், தவான் அம்பயரிடம் முறையிட்டார். இதனை உணர்ந்த நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்தினர். வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் சுமார் 30 நிமிடம் வரை ஆட்டம் தடைப்பட்டது. இதனால் டக்வொர்த் லீவிஸ் முறை கொண்டுவரப்பட்டு இந்திய அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எப்போது மழையின் குறுக்கிட்டால் இந்திய அணியின் ஆட்டம் தடைப்பட்டிருக்கிறது. இந்திய அணி வரலாற்றில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது இதுதான் முதல் முறை. முன்னதாக 1995-ம் ஆண்டு ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடந்த இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான போட்டியின்போது இதேபோல் வெயில் அதிகமாக இருந்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. சுமார் 14 வருடங்களுக்குப் பிறகு, இப்போதுதான் மீண்டும் தடைப்பட்டுள்ளது.