Published:Updated:

இந்திய அணியின் #10YearChallenge! - 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூஸிலாந்து மண்ணில் வெற்றி #NZvIND

இந்திய அணியின் #10YearChallenge! - 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூஸிலாந்து மண்ணில் வெற்றி #NZvIND
இந்திய அணியின் #10YearChallenge! - 10 ஆண்டுகளுக்குப் பின்னர் நியூஸிலாந்து மண்ணில் வெற்றி #NZvIND

நியூஸிலாந்து அணிக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

Photo Credit:BCCI

இந்தியா - நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நேப்பியர் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ ஆகியோர் நியூஸிலாந்தின் இன்னிங்ஸை தொடங்கினர். அந்த அணிக்கு இரண்டாவது ஓவரிலே அதிர்ச்சி காத்திருந்தது. மார்டின் கப்தில் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஷமியின் பந்துவீச்சில் போல்ட் ஆகி விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து சிறப்பாகப் பந்துவீசிய ஷமி மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான காலின் முன்ரோவையும் காலி செய்தார்.

Photo Credit:BCCI

இருவரும் இவரது பந்துவீச்சில் க்ளீன் போல்ட் ஆனது குறிப்பிடத்தக்கது. காலின் முன்ரோவின் விக்கெட் ஒருநாள் போட்டியில் ஷமியின் 100-வது விக்கெட்டாக அமைந்தது. 56-வது போட்டியிலே இந்த சாதனை ஷமி எட்டியுள்ளார். தொடர்ந்து விளையாடிய நியூஸிலாந்து அணி குல்தீப் - ஷமியின் பந்துவீச்சில் சுருண்டனர். கனே வில்லியம்ஸை தவிர மற்ற வீரர்கள் சொதப்பினர். 38 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 157 ரன்கள் மட்டுமே எடுத்தது. கனே வில்லியம்ஸ் அதிகபட்சமாக 64 ரன்கள் குவித்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், ஷமி 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். 

Photo Credit:BCCI

தொடர்ந்து இந்திய அணி தனது இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரராகக் களமிறங்கிய ரோஹித் ஷர்மா ஏமாற்றினாலும், தவான் - கோலி இணை அணியைக் காப்பாற்றியது. இருவரும் நியூஸிலாந்து பந்துவீச்சை சமாளித்து ஆடினர். கேப்டன் விராட் கோலி 45 ரன்கள் எடுத்தபோது கேட்ச் கொடுத்த அவுட் ஆனார். இருப்பினும், தவான் இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். முன்னதாக அதிக வெயில் காரணமாகப் போட்டி சிறிது நேரம் தடைப்பட்டது. அதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி இந்திய அணிக்கு 156 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இந்த இலக்கை 34.5 ஓவர்களிலேயே இந்திய அணி எட்டியது. தவான் அதிகபட்சமாக 75 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 10 ஆண்டுகளுக்குப்  பின் நியூஸிலாந்து மண்ணில் வெற்றிக்கொடி நாட்டியுள்ளது. முன்னதாக 2009-ம் ஆண்டுதான் நியூஸிலாந்து அணியை இந்திய அணி வீழ்த்தியிருந்தது.

2009-ல் மகேந்திரசிங் தோனி தலைமையிலான இந்திய அணி நியூஸிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அப்போது 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்து அணியும் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்திய அணியும் வென்றன.