Published:Updated:

சவாலான நேப்பியர் ஆடுகளம் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு #Indvsnz

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஒரு நாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டிகளில்  விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி நேப்பியர் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கனே வில்லியம்ஸன் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா அணி சில நாள்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது. இரண்டு போட்டிகளிலும் இந்தியா சேஸிங் செய்தே வெற்றி பெற்றது. இந்திய அணியில் ரோகித் ஷர்மா, விராட் கோலி, தோனி ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த ஆண்டை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியுள்ளது.

சவாலான நேப்பியர் ஆடுகளம் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு #Indvsnz

நியூசிலாந்தும் அணி இலங்கை அணியை வொயிட் வாஷ் செய்த உத்வேகத்துடன் இந்தப்போட்டியில் களமிறங்குகிறது. வலுவான இரண்டு அணிகள் மோதும் போட்டி என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. நியூசிலாந்து அணியின் ராஸ் டெய்லர், வில்லியம்ஸ் ஆகியோர் மிரட்டி வருகின்றனர். இவ்விரு அணிகளும் இதுவரை ஒருநாள் போட்டியில் இதுவரை 101 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இதில் இந்திய அணி 51 முறையும், நியூசிலாந்து அணி 44 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. 5 போட்டியில் முடிவு இல்லாமல் போனது. ஒரு ஆட்டம் டையில் முடிந்துள்ளது. 

சவாலான நேப்பியர் ஆடுகளம் - டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு #Indvsnz

அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா, ஷிகர் தவான், கேதர் ஜாதவ், அம்பத்தி ராயுடு, டோனி, குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், புவனேஷ்வர்குமார்,  முகமது ஷமி, விஜய் சங்கர்.

நியூசிலாந்து: கனே வில்லியம்சன் (கேப்டன்), மார்ட்டின் கப்தில், காலின் முன்ரோ, ராஸ் டெய்லர், ஹென்றி நிகோல்ஸ், டாம் லாதம், மிட்செல் சான்ட்னெர், பிரேஸ்வெல், பெர்குசன், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட்.