Published:Updated:

கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards

கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards
கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards

2018-ம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டன. சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர், ஆண்டின் சிறந்த வீரர் என 3 விருதுகளையும் இந்திய கேப்டன் விராட் கோலி வென்று அசத்தியுள்ளார். ஐசிசி விருது வரலாற்றில், ஒரே ஆண்டில், அந்த 3 விருதுகளையும் வென்ற முதல் வீரர் கோலிதான்!

கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards

13 டெஸ்ட் போட்டிகளில் 1322 ரன்களும், 14 ஒருநாள் போட்டிகளில் 1202 ரன்களும் குவித்து, கடந்த ஆண்டு பட்டையைக் கிளப்பினார் கோலி. ஆசிய கோப்பை போன்ற தொடரில் விளையாடாத நிலையிலும், ஒருநாள் கிரிக்கெட்டின் டாப் ரன் ஸ்கோரராக வந்தது இவர்தான். தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா என எதிர்த்து விளையாடிய அனைத்து அணிகளின் பௌலர்களுக்கும் சிம்ம சொப்பனமாக விளங்கிய விராட், 'ஆண்டின் சிறந்த கிரிக்கெட்டர்' விருதைத் தொடர்ந்து, இரண்டாவது முறையாக வென்றுள்ளார். ரிக்கி பான்டிங்குக்குப் பிறகு, இந்த விருதை இரண்டு முறை பெறும் வீரர் இவர்தான்! 

கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards

இந்த விருதுகள் பற்றி ஐசிசி-க்கு கொடுத்த பேட்டியில் கோலி பேசியது : "சிறந்த வீரருக்கான விருதை இரண்டாவது முறை வென்றிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடும்போது, நானும் சிறப்பாக விளையாடுவது திருப்தியளிக்கிறது. பல வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடும்போது, ஐசிசி போன்ற அமைப்பால் நான் கௌரவிக்கப்பட்டுள்ளதைப் பெருமையாக நினைக்கிறேன். இது எனக்கு இன்னும் உத்வேகம் அளிக்கும். தொடர்ந்து இதுபோன்று கன்சிஸ்டென்ட்டாக விளையாட, இந்த விருது எனக்கு உந்துசக்தியாக இருக்கும். 

2018 எனக்கு மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்தது. இப்படி விளையாடுவேன் என்று நானே எதிர்பார்த்ததில்லை. சரியான நோக்கத்தோடு, கடுமையாக முயற்சி செய்தால், அதற்கான பதில் நம் கண் முன்னே தெரியும். எப்போதுமே அணிக்கு உதவ வேண்டும் என்பது மட்டுமே என் நோக்கமாக இருந்திருக்கிறது. அதுதான் என்னை அடுத்த கட்டங்களுக்கு எடுத்துச்செல்கிறது. அடிலெய்ட் வெற்றியும், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் மெல்போர்னில் வென்றதும்தான் இந்த ஆண்டின் என்னுடைய சிறந்த தருணங்கள். அணியின் வெற்றிதானே நமக்கு மகிழ்ச்சியையும் சிறந்த நினைவையும் கொடுக்கும்!"

சில தினங்களுக்கு முன்பு பெண்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டபோது... சிறந்த வீராங்கனை, சிறந்த ஒருநாள் வீராங்கனை என இரண்டு விருதுகளையும் ஸ்மிரிதி மந்தனா வென்றிருந்தார். இப்போது இந்திய கேப்டன் கோலி அனைத்து விருதுகளையும் வென்று 'க்ளீன் ஸ்வீப்' செய்துள்ளார். வளர்ந்துவரும் இளம் வீரருக்கான விருதும் இந்தியாவுக்கே! அந்த விருதை, விக்கெட் கீப்பர் ரிசப் பன்ட் வென்றுள்ளார். 

கோலி - 3, பன்ட் - 1: ஐசிசி விருது விழாவை ஸ்வீப் செய்த இந்தியா! #ICCAwards

இந்த சிறப்புகள் மட்டுமல்லாமல், இந்த ஆண்டின் ஒருநாள் மட்டும் டெஸ்ட் அணிகளுக்கு கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளார் விராட். அவரோடு ஜஸ்ப்ரீத் பும்ராவும் இரண்டு அணியிலும் இடம்பெற்றுள்ளார். ரிசப் பன்ட் டெஸ்ட் அணியிலும், ரோஹித் ஷர்மா மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஒருநாள் அணியிலும் இடம்பெற்றுள்ளனர். இந்த ஆண்டு ஐசிசி விருது மொத்தமும் இந்திய மயம்தான்! 

நியூஸிலாந்தில் நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரை, இந்திய அணி வென்றது, கடந்த ஆண்டின் சிறந்த தருணமாக ரசிகர்களால் தேர்வுசெய்யப்பட்டது. வாக்களித்த ரசிகர்களில் 48% பேர், இந்தியாவின் இளம் சாம்பியன்களைத் தேர்வு செய்துள்ளனர்.