சில வாரங்களுக்கு முன்புவரை ரமேஷ் பவார், மிதாலி ராஜ், ஹர்மன் ப்ரீத் கவுர் பிரச்சனை தான் இந்திய ஸ்போர்ட்ஸ் உலகின் ட்ரெண்டிங். கடந்த மாதம் நடைபெற்ற பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியா அரையிறுதியில் இங்கிலாந்திடம் தோற்று தொடரிலிருந்து வெளியேறியது. இந்தப் போட்டியில் இந்திய பெண்கள் அணியின் நட்சத்திர வீராங்கனை மித்தாலி ராஜை அணியில் சேர்க்காதது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது,

மேலும் பவாரின் மேல் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை மிதாலி கூற பதிலுக்கு பவாரும் மிதாலி மேலுள்ள குறைகளை கடிதமாக பிசிசிஐக்கு அனுப்ப பிரச்சனை பூதாகரமாக வெடித்தது. இந்த பிரச்சனையில் பவாருக்கு துணையாக ஹர்மன்ப்ரீத், ஸ்மிரிதி இருவரும் செயல்பட்டது பலருக்கு அதிருப்தியளித்தது. இந்நிலையில் ரமேஷ் பவாரின் பதவிக்காலம் நவம்பர் இறுதியோடு முடிவுக்கு வர அடுத்த பயிற்சியாளரை நியமிக்க பிசிசிஐ களமிறங்கியது. பல்வேறு கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு புதிய பயிற்சியாளராக தமிழகத்தைச் சேர்ந்த டபுள்யு.வி.ராமன் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.

யார் இந்த டபுள்யு.வி.ராமன் ?

வூர்கேரி வெங்கட்ராமன் 1988லிருந்து 1997 வரையிலான காலக் கட்டங்களில் இந்திய அணிக்காக விளையாடினார். ஓப்பனிங் பேட்ஸ் மெனான இவர் 1992-93 தென்னாபிரிக்கத் தொடரில் சதமடித்தது குறிப்பிடத்தக்கது. இதோடு 132 முதல்தர போட்டிகளில் ஆடி 7939 ரன்களைக் குவித்துள்ளார்.

1997ல் ஓய்வை அறிவித்த இவர் அதன்பின்னர் தமிழ்நாடு (2006 - 08, 2013-14) மற்றும் மேற்கு வங்க அணிகளுக்கு( 2010- 12) ரஞ்சிக் கோப்பையில் பயிற்சியாளராகவும், கிங்ஸ் லெவன் பஞ்சாப்பிற்கும்(2013) , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (2014) அணிக்கும் துணைப் பயிற்சியாளராகவும் இருந்தார். 2015-ம் ஆண்டிலிருந்து தேசிய கிரிக்கெட் அகாடமியில் பேட்டிங் பயிற்சியாளராகவும் இருந்து வருகிறார்.

பல ஆண்டுகளாக கிரிக்கெட் பயிற்சியாளராக இருந்து வந்தாலும் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியை மீண்டும் உயிர்ப்பித்து அதை சிறப்பாக செயல்படுத்தி வருவதில்தான் ராமன் அதிகம் பிரபலமானார். இந்த அகாடமியைத் தவிர இந்தியாவின் U19 அணிக்கும் பயிற்சியாளராக சில காலங்கள் இருந்து வந்துள்ளார். அவ்வப்போது இளையோர் அணியின் ஓவர்சீஸ் தொடர்களிலும் பயிற்சியாளராக இருந்த அவர் டிராவிட்டோடு சேர்ந்து பல இளம் வீரர்களை துடிப்பாக தயார்படுத்தியுள்ளார் அதன் விளைவை தான் இளையோர் உலகக்கோப்பையில் காண முடிந்தது. இந்திய பெண்கள் அணியில் தற்போது நிலவிக் கொண்டிருக்கும் அமைதியின்மை, கோல்டு வார், ஈகோ அத்தனைக்கும் ராமனின் வருகை ஒரு மாற்றாக அமையலாம். இளம் வீரர்களை மட்டுமன்றி அனுபவ வீரர்களையும் கையாள்வதில் தேர்ந்தவர் ராமன், உதாரணமாக 2011 - 12 காலக்கட்டங்களில் பெங்கால் அணியின் பயிற்சியாளராக இருந்த போது கேப்டன் கங்குலி அனைத்து வகை கிரிக்கெட்டிலிருந்தும் தன் ஓய்வை அறிவிக்க அணிக்குள் போட்டியும் மோதலும் உருவானது. மனோஜ் திவாரி, லக்ஷ்மி ரத்தன் சுக்லா என இரு அனுபவ வீரர்களிடையே கேப்டன் பதவிக்கான போட்டி உருவாக அதை சுமூகமாக பேசி முடித்து பெங்கால் அணியை விஜய் ஹசாரே கோப்பையை வெல்ல வைத்தார். அதைப் போலவே தமிழக அணியில் நிலவிய ஈகோவையும் சரிக்கட்டிய ராமன் 2014 - 15 ரஞ்சிக்கோப்பையில் தமிழகத்தை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்றார்.

கோபக்காரர், அதே நேரம் அணியைக் கட்டுக்கோப்பாக வழிநடத்துவதிலும் கெட்டிக்காரர். கடந்த சீசன் வரை தமிழக அணியின் கேப்டனாக இருந்த அபினவ் முகுந்த், ‘‘எவ்வளவு ப்ரஷர் இருந்தாலும் வீரர்களிடையே அதைக் கடத்தமாட்டார். எங்களின் மேல் அதிக அக்கறைக் கொண்டவர். வீரர்களை தேர்ந்தெடுப்பதில் என்னோடு அதிகம் வாக்குவாதம் செய்திருந்தாலும் என் முடிவுகளை அவரும், அவர் முடிவுகளை நானும் பரஸ்பரமாக ஏற்றுக்கொண்டு சம்மதித்திருக்கிறோம்.

என் உணர்வுகளை அவர் மதித்து இருக்கிறார். அவர் ஒரு நல்லமனிதர், சிறந்த பயிற்சியாளர்" என்று ராமனுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

டெக்னிக்கலாக ஒரு வீரரைப் பற்றிய இவரின் கணிப்பு மிகவும் துல்லியமாக இருக்கும். ரஞ்சிக் கோப்பையில் களமிறங்குவதற்கு முன்னரே 2008ஆம் ஆண்டு மணீஷ் பாண்டே பேட்டிங்கில் சிறப்பான வீரராய் வருங்காலத்தில் உருவாவார் என்பதை கணித்தவர் இவர்.

வெல்கம் ராமன்!