இந்திய கிரிக்கெட்டுக்கு உச்சத்தில் தொடங்கியிருக்கிறது 2019. 72 ஆண்டுகளில் முதல்முறையாக

ஆஸ்திரேலியாவில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது இந்திய கிரிக்கெட் அணி. இவ்வளவு ஆண்டுகளில் இதுதான் ஆஸ்திரேலியாவின் மிக மோசமான அணி என்கிற குற்றச்சாட்டுகள் இருந்தாலும், ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது மிகப்பெரிய சாதனையே.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மட்டுமல்ல 2018 முழுக்க மிகவும் சிறப்பாகப் பந்து வீசி ஆச்சர்யப்படுத்தியது பும்ரா- இஷாந்த்- ஷமி எனும் மூவர் கூட்டணி. வேகப்பந்து வீச்சில்தான் இந்தியா சுமார் என்கிற விமர்சனங்களை மொத்தமாக துடைத்தெறிந்துவிட்டது இந்த மூவரின் பந்துவீச்சும். பெர்த் டெஸ்ட் தோல்விக்குப் பிறகு 1-1 என டெஸ்ட் தொடர் சமநிலைக்கு வந்துநிற்க மெல்போர்னில் மிரட்டினார் பும்ரா. முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகள், இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகள் என பும்ராவின் பந்துவீச்சு ஆஸ்திரேலியாவின் பேட்டிங் ஆர்டரை ஒன்றும் இல்லாமல் ஆக்கியது. பேட்டிங், ஸ்பின் மட்டுமல்லாமல் வேகப்பந்து வீச்சிலும் இந்தியா உச்சத்தைத்தொட்டிருக்கிறது என்று மகிழ்ச்சியோடு சொல்லலாம்.

கிரிக்கெட்டைத் தாண்டி 2018 இந்திய விளையாட்டு உலகத்துக்கும், தமிழ்நாட்டுக்கும் மிகச்சிறப்பான ஆண்டு. கிரிக்கெட், கால்பந்து, செஸ், வில்வித்தை. டேபிள் டென்னிஸ் என விளையாட்டின் அத்தனை வெரைட்டிகளிலும் வென்று தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்த்த 10 தமிழர்களைப் பற்றிய சிறப்பு கட்டுரையும் இந்த இதழில் இடம்பிடித்திருக்கிறது.

2018 விளையாட்டு உலகின் பெஸ்ட் மொமன்ட்ஸ், டக்வொர்த் லூயிஸ், டைம் அவுட், ஷூட் தி கேள்வி என ஸ்போர்ட்ஸ் விகடனின் அத்தனை சிறப்புகளும் இந்த இதழிலும் தொடர்கிறது. ஸ்போர்ட்ஸ் விகடனைப் பற்றிய உங்கள் கருத்துகளை எங்களுக்கு எழுத மறக்காதீர்கள். sports@vikatan.comம் உங்கள் இ-மெயில்களுக்காக காத்திருக்கிறது!

அன்புடன்

ஆசிரியர்