Published:Updated:

”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு!

”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு!
”கடும் நெருக்கடியிலும் தோனிக்கு ஆதரவளித்தவர் கோலி” - கங்குலி பாராட்டு!

இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்ந்தவர் மகேந்திர சிங் தோனி. அதிரடி விக்கெட் கீப்பிங், அசால்ட் ஃபினிஷிங் என, கிரிக்கெட் ரசிகர்களின் உள்ளங்களை ஆட்கொண்டவர். ஆனால், சமீபத்திய ஆண்டுகளாக சறுக்கல்களை சந்திக்கும் நிலைக்கு ஆளானார், அவர். “என்ன இது? இவ்வளவு மெதுவாக ஆடுகிறார்” என்று கிரிக்கெட் ரசிகர்களும், “தோனிக்கு வயாதாகிவிட்டது. இனியும் அவர் அணியில் இருக்க வேண்டியது அவசியம் தானா?” என்று முன்னாள் வீரர்களும் விமர்சித்து வந்தனர்.

அவர்களுக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பதிலடி கொடுத்தார் தோனி. 2018ம் ஆண்டில் ஓர் அரைச்சதம் கூட அடிக்காதவர், 2019ம் ஆண்டின் தொடக்கத்திலேயே 3 அரைச்சதங்களை அடித்து அசத்தினார். சிட்னியில் 51 ரன்கள், அடிலைடில் 55 ரன்கள், மெல்பேர்னில் 87 ரன்கள் என, ‘ஹாட்ரிக் அரை சதம்’ அடித்து தெறிக்கவிட்டார். அப்போது தோனியை விமர்சித்தவர்களே, இப்போது “தோனி போல வருமா” என்று சிலாகித்து வருகிறார்கள். 

இந்த நிலையில், ”கடும் நெருக்கடியில் இருந்து தோனி மீண்டுவர கோலி தான் காரணம்” என்று பாராட்டியுள்ளார், முன்னாள் கேப்டன் கங்குலி. இது குறித்து பேசியிருப்பவர், “தோனிக்கும் கோலிக்குமான உறவு அனைவரும் அறிந்தது தான். இரண்டு பேருமே இந்திய அணியில் நீண்ட நாட்களாக விளையாடி வருகிறார்கள். இப்போதைக்கு இந்திய அணியில் தோனி தான் சீனியர் வீரர். இதனாலேயே அவர் கடும் நெருக்கடிகளை சந்தித்தார். அந்தத் தருணங்களில், தோனிக்கு தொடர்ந்து ஆதரவளிப்பவராக கோலி இருந்தார்.

தோனியை அணியில் இருந்து நீக்காமல் தொடர்ந்து அணியில் இடம்பெற வைத்தார். ஒருவருக்கொருவர் அளிக்கும் மரியாதையே ஒரு சிறந்த அணியை உருவாக்கும். அந்த வகையில், கோலியை பாராட்டுகிறேன்” என்று சொல்லியிருக்கிறார்.