Published:Updated:

தோனி!

தோனி!
பிரீமியம் ஸ்டோரி
தோனி!

தோனி!

தோனி!

தோனி!

Published:Updated:
தோனி!
பிரீமியம் ஸ்டோரி
தோனி!
தோனி!

* 7.7.1981: ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் பிறந்தார், தோனி. தந்தை பம்ப் ஆபரேட்டர், தாய் இல்லத்தரசி.

தோனி!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோனி!

* தோனிக்கு சிறு வயதிலேயே படிப்பைவிட விளையாட்டின் மீதே ஆர்வம் அதிகம். விளையாட்டில் சாதிக்கும்  கனவு அப்போதே விரிய ஆரம்பித்துவிட்டது.

தோனி!

* கால்பந்தாட்டத்தில் கோல்கீப்பராக இருந்த தோனியை, “விக்கெட் கீப்பிங் செய்வியா?” என அவரின் பள்ளி பயிற்சியாளர் பானர்ஜி கேட்டார். “வாய்ப்பு கிடைத்தால் செய்வேன்” என்ற தோனியின் பதில், அவரின் வாழ்வை திசை திருப்பியது.

தோனி!

* அதுவரை கிரிக்கெட் பக்கமே செல்லாத தோனி, கடும் பயிற்சியில் ஈடுபட்டு, சில நாள்களிலே கீப்பிங்கிலும் பேட்டிங்கிலும் அதிரடி காட்டினார்.

தோனி!

எப்போதும் 6-வது வீரராகக் களமிறங்கி அதிரடி காட்டும் தோனி, 12 ஜூன் 1997-ல் பள்ளிகளுக்கு இடையே நடந்த போட்டியில், “எனக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்க. செஞ்சுரி அடிப்பேன்” எனத் தன்னம்பிக்கையோடு கூறினார். அந்தப் போட்டியில் 213 ரன்கள் எடுத்து தன்னை நிரூபித்தார்.

தோனி!

* தோனியின் திறமையைக் கண்ட இந்திய நிலக்கரி நிறுவனத்தின் தேவல் சாஹே, தன்னுடைய கிளப்பில் சேர்த்துக்கொண்டார். அவர் அடிக்கும் ஒவ்வொரு சிக்ஸருக்கும் 50 ரூபாய் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.

தோனி!

* படிப்பில் கவனம் குறைந்த தோனியை நினைத்து, அவர் தந்தைக்கு கவலை ஏற்பட்டது. தோனியோ தன் லட்சியத்தில் உறுதியாக இருந்தார்.

தோனி!

* 1999... பெரிதும் எதிர்பார்த்த, ரஞ்சி கோப்பையில் பீஹார் அணிக்காக விளையாட தோனிக்கு வாய்ப்பு வந்தது. ஆனால், அந்தத் தொடரில் சிறப்பாக ஆடாததால், இந்திய அணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட வில்லை.சோர்ந்துவிடாமல் தொடர்ந்து முயன்றார்.

தோனி!

* துலீப் கோப்பைக்குக் கிழக்கு மண்டல அணிக்குத் தேர்வானார். ‘‘நாளைக்கே நீ கொல்கத்தா செல்ல வேண்டும்” என்றபோது, தோனியிடம் சுத்தமாகப் பணம் இல்லை. நண்பர்கள் உதவியுடன், பணம் பெற்று தயாராகியும், கொல்கத்தா செல்லும் விமானம் கிளம்பிவிட்டது. ஏமாற்றத்துடன் திரும்பினார்.

தோனி!

* 2001-ம் ஆண்டு, ஸ்போர்ட்ஸ் கோட்டாவில் தோனிக்கு ரயில்வே டிக்கெட் கலெக்டர் வேலை கிடைக்கிறது. குடும்ப சூழ்நிலை கருதி, கரக்பூர் செல்கிறார் தோனி. நிலையான வேலை இருந்தும் கிரிக்கெட் மீதே காதல். தினமும் கிரிக்கெட் பயிற்சியும் மேற்கொண்டார்.

தோனி!

* கிரிக்கெட்டா வேலையா? என்று முடிவெடுக்க வேண்டிய அந்த ஒரு தருணமும் தேடி வந்தது. மனப்போராட்டத்தின் இறுதியில் தோனி தேர்வு செய்தது கிரிக்கெட். அடுத்த ரயிலிலே ராஞ்சி புறப்பட்டார்.

தோனி!

* பல தடைகளை உடைத்து முழுவீச்சில் களம் இறங்கினார்.  தியோதர் டிராபி, துலீப் டிராபி என வெளுத்து வாங்கி, இந்தியா A அணியில் நுழைந்தார்.

தோனி!

* கீழ் வரிசையில் வந்து, பவுண்டரிகளும் சிக்ஸர்களுமாக பறக்கவிட்டு, விக்கெட் கீப்பிங்கிலும் அசத்தினார் தோனி. இந்திய ஒரு நாள் அணிக்குத் தேர்வுசெய்யப்பட்டார்.

தோனி!

* 2004... வங்கதேசம் அணிக்கு எதிராக, தன் முதல் சர்வதேச ஒருநாள் போட்டி. அதில், டக் அவுட். தொடர் முழுவதுமே சோபிக்கவில்லை. நம்பிக்கை இழக்கவில்லை. அடுத்து பாகிஸ்தான் தொடர்.  விசாகப்பட்டினத்தில் நடந்த போட்டியில் 148 (123) ரன் எடுத்து, இந்திய விக்கெட் கீப்பர்களிளேயே அதிக ரன் எடுத்தவர் என்ற சாதனையும் படைத்தார்.

தோனி!

* அதே ஆண்டு, இலங்கையுடன் போட்டியில் 183 ரன்கள். தோனி என்ற பெயரை இந்தியாவே உச்சரித்தது. 2007-ம் ஆண்டு, 50 ஓவர் உலகக் கோப்பையில் இந்தியா படுதோல்வி. அதே ஆண்டில் 20 ஓவர் உலகக் கோப்பையில் கேப்டன்சி பொறுப்பு தோனியிடம் வந்தது.

தோனி!

* எந்தச் சவாலையும் துணிவோடு எதிர்கொள்ளும் தோனி, இந்திய அணியை வழிநடத்தும் பெரிய சவாலையும்  எதிர்கொண்டார். சீனியர்கள் இல்லாத இளம் அணியை வழிநடத்தி, வெற்றியும் கண்டார். தோனியின் தலைமையில் இந்தியா அந்தக் கோப்பையை வென்றது.

தோனி!

* விளையாட்டில் இந்தியாவின் உயரிய விருதான ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதும் தோனி கையில் ஜொலித்தது.

தோனி!

* 2008... டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று விதமான போட்டிகளுக்கும் தலைமை ஏற்றார். பல தொடர்களையும் வென்று கொடுத்தார். 2009-ல் இந்தியாவை நம்பர் 1 டெஸ்ட் அணியாக உயர்த்தினார். 2011 உலகக் கோப்பையை கவனத்தில்கொண்டு சீனியர் வீரர்களை நீக்கி பல அதிரடி மாற்றங்களைக் கொண்டுவந்தார்.

* பலரது விமர்சனங்களுக்கு உள்ளானபோதும், தான் எடுத்த முடிவில் மிகுந்த நம்பிக்கை வைத்தார். அவரது கேப்டன்சியில்  2011 உலகக் கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிராபி, மூன்று ஐபிஎல் கோப்பைகள் என வேட்டை நடத்தி, ‘கேப்டன் கூல்’ எனச் செல்லமாக அழைக்கப்பட்டார்.

தோனி!

* இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலம், குடும்ப சூழ்நிலைகள் என எதுவும் தோனியின் கனவை அடையும் பயணத்திலிருந்து நிறுத்தவில்லை. பல தடைகள் வந்தும் தன் முயற்சியை விடவில்லை. அதுதான் சாம்பியனின் சுபாவம். தோனி ஒரு சாம்பியன்!

- கி.ர.ராம் கார்த்திகேயன்