Published:Updated:

 ‘பாண்ட்யா - ராகுல் மனிதர்கள்தானே!’- என்ன சொல்கிறார் கங்குலி

 ‘பாண்ட்யா - ராகுல் மனிதர்கள்தானே!’- என்ன சொல்கிறார் கங்குலி
 ‘பாண்ட்யா - ராகுல் மனிதர்கள்தானே!’- என்ன சொல்கிறார் கங்குலி

'ஹர்திக் பாண்ட்யா - கே.எல். ராகுல் விவகாரத்தில் திரும்பத் திரும்ப பேசுவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை' என கங்குலி தெரிவித்துள்ளார்.


 

இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர்களான ஹர்திக் பாண்ட்யா, கே.எல்.ராகுல் ஆகியோர், நிகழ்ச்சி ஒன்றில் பெண்கள்குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினர்.  இதுதொடர்பாக கண்டனத்தைப் பதிவுசெய்த பிசிசிஐ, இருவரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது.  ஆஸ்திரேலியா தொடரில் இடம்பெற்றிருந்த இருவரையும்  பிசிசிஐ நீக்கியது. இதையடுத்து, இந்தியா திரும்பிய இருவரும் தங்களது செயலுக்கு மன்னிப்பு கோரினர். ஆனால், பல முன்னணி வீரர்கள் தங்களது அதிருப்தியைப் பதிவுசெய்தனர். பிசிசிஐ இந்த விவகாரத்தை அவ்வளவு எளிதாக விடுவதாகத் தெரியவில்லை. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி இருவருக்கும் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளார்.

மும்பையில், தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த கங்குலியிடம் இந்த விவகாரம்குறித்து கருத்து கேட்கப்பட்டது. அப்போது, “ஹர்திக் - ராகுல் பங்கேற்ற அந்த நிகழ்ச்சியை நான் பார்க்கவில்லை. நாம் அனைவரும் மனிதர்கள்தான் தவறு செய்வது என்பது இயல்பு. அதைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கக் கூடாது. தவறு செய்தவர்கள் நிச்சயம் வருந்துவார்கள். அதிலிருந்து திருந்தி, சிறந்த மனிதர்களாக வருவார்கள். நாம் உணர்வுள்ள மனிதர்கள்; இயந்திரங்கள் இல்லை. எல்லோருடைய வாழ்விலும் இப்படியான ஒரு நிகழ்வு இருக்கத்தான் செய்யும். அதைக் கடந்து வரவேண்டும். மீண்டும் இப்படி நடைபெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நாமும் வாழ வேண்டும் மற்றவர்களை வாழவிட வேண்டும். இளம் தலைமுறை கிரிக்கெட்டர்களில் தங்களது பொறுப்பு உணர்ந்து, அர்ப்பணிப்போடு செயல்படக்கூடிய வீரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். விராட் கோலி இதற்கு சிறந்த உதாரணம்'' என்றார்.