Published:Updated:

`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து சச்சின் புகழாரம்!

`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து  சச்சின் புகழாரம்!
`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து சச்சின் புகழாரம்!

இனி, 'ஒரு முனையில் இருந்துகொண்டு ஆட்டத்தை தோனியே கட்டுப்படுத்துவார்' என  கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெரிவித்துள்ளார்.

`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து  சச்சின் புகழாரம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதன் மூலம், இரு அணிகளும் சமனில் உள்ளது. போட்டியின் இறுதிக்கட்டம் விறுவிறுப்பை ஏற்படுத்தியது. இந்த ஆட்டத்தின்மூலம் தன்மீதான விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் தோனி. தோனியின் ஆட்டத்தை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடினர். `பெஸ்ட் ஃபினிஷர்' `தோனி இஸ் பேக்' என்பன போன்ற பதிவுகள் தெறித்தன. தோனியின் ஆட்டம்குறித்து கிரிக்கெட் வீரர்கள்  பலர் கருத்து தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில், தோனி குறித்துப் பேசிய சச்சின்,``நடுவரிசையில் களமிறங்கி, நங்கூரமாக ஆட்டத்தைக் கட்டுப்படுத்தும் வல்லமையை தோனி பெற்றுள்ளார்.

`இனி ஆட்டத்தை அவரே கட்டுப்படுத்துவார்' - தோனி குறித்து  சச்சின் புகழாரம்!

ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பதில், எப்போதும்போல அவர் சிறப்பாகச் செயல்படுகிறார். முதல் ஒருநாள் போட்டியில், அவர் சற்று இறுக்கத்துடன் காணப்பட்டார். அதனால், அவரால் நினைத்த இடத்தில் பந்தை அடிக்கமுடியாமல்போனது. இது, எல்லோருக்கும் நடக்கூடிய இயல்பான ஒன்றுதான்.  ஆனால், இரண்டாவது ஒருநாள் போட்டியில் மாற்று சிந்தனையுடன் களமிறங்கி, பந்துகளைக் கணித்துச் செயல்பட்டார். முற்றிலும் வேறொரு வீரராக அவர் காணப்பட்டார். களத்தில் இறங்கியதும் தடுப்பாட்டம் ஆடி, பந்துவீச்சாளர்களின் திட்டத்தை கணித்துச் செயல்பட்டார். இனிவரும் காலங்கிலும் நங்கூரம் போல ஒரு முனையிலிருந்தே அவர் ஆட்டத்தைக் கட்டுப்படுத்துவார்'' என்றார். மேலும் தினேஷ்கார்த்திக்கைப் புகழ்ந்தவர், `சிறப்பான ஆட்டத்தை தினேஷ்கார்த்திக் வெளிப்படுத்தி, ஃபினிஷர் தோனிக்கு ஒத்துழைப்புகொடுத்து ஆடினார்'' என்று தெரிவித்தார்.