Published:Updated:

`பட்டம் விடவும் இல்லை; வீட்டை விட்டு வெளியேறவும் இல்லை' - ஹர்டிக் பாண்டியா குறித்து தந்தை சோகம்!

`பட்டம் விடவும் இல்லை; வீட்டை விட்டு வெளியேறவும் இல்லை' - ஹர்டிக் பாண்டியா குறித்து தந்தை சோகம்!
`பட்டம் விடவும் இல்லை; வீட்டை விட்டு வெளியேறவும் இல்லை' - ஹர்டிக் பாண்டியா குறித்து தந்தை சோகம்!

பாலிவுட் திரைப்பட இயக்குநர் கரண் ஜோஹர், தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'காபி வித் கரண்' என்ற நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிவருகின்றார். இதில் சிறப்பு விருந்தினராக, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான கே.எல். ராகுல் மற்றும் ஆல் ரவுண்டர் ஹர்டிக் பாண்டியா ஆகிய இருவரும் சமீபத்தில் பங்கேற்றிருந்தனர். நிகழ்ச்சியில், பெண்களைப் பற்றிப் பேசும்போது தவறான கருத்துகளை கூறினர், பாலியல் தொடர்பான கருத்துகளை வெளிப்படையாகப் பேசியதால், சர்ச்சை வெடித்தது.

இருவருக்கும் கண்டனம் வலுத்தது.  இதைத் தொடர்ந்து, தன்னுடைய கருத்து யாருடைய மனதையாவது காயப்படுத்தியிருந்தால், மன்னித்து விடுமாறு ட்விட்டர் பக்கத்தில் பதிவுசெய்திருந்தார் ஹர்டிக். இரு வீரர்களுமே ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் இடம் பிடித்திருந்தனர். சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டதால்  இந்திய அணியில் இருந்து இருவரும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

தொடர்ந்து  ஆஸ்திரேலியாவில் இருந்து தாய்நாடு  திரும்பிய ஹர்டிக் பாண்டியா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறார். வீட்டை விட்டு வெளியே வருவதில்லை என்று அவரின் தந்தை ஹிமான்சு தெரிவித்துள்ளார். '' பி.சி.சி.ஐ சஸ்பெண்ட் செய்ததால் ஹர்டிக் பாண்டியா மனதளவில் வேதனை அடைந்துள்ளான். மகா சங்கராந்தி தினத்தில் வழக்கமாக அவன் பட்டம் விடுவான். இந்த முறை பட்டம் விடவும் இல்லை. நாங்கள் யாரும் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசவில்லை. ஆனால், இன்னொரு முறை இது போன்ற தவறு நடக்காமல் பார்த்துக் கொள்வான்'' என்று ஹிமான்சு கூறியுள்ளார்.