Published:Updated:

`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி!

`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி!
`அவரை யாராலும் கணிக்க முடியாது;ஹேட்ஸ் ஆஃப் தோனி' - கோலி நெகிழ்ச்சி!

`தோனி என்ன நினைக்கிறார் என்பதை யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அணியின்  ஒருபகுதியாக தோனி இருக்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை' என்று  கோலி தெரிவித்துள்ளார்.


ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, டி20, டெஸ்ட், ஒருநாள் உள்ளிட்ட போட்டிகளில் விளையாடி வருகிறது.  நடந்து முடிந்த  டி20 போட்டி சமனில் முடிய, டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது. இந்நிலையில் இரண்டாவது ஒருநாள் போட்டி அடிலெய்டில் இன்று நடைபெற்றது, இந்த போட்டியில்  டாஸ் வென்ற ஆஸ்திரேலியா  பேட்டிங்கை தேர்வு செய்து, 298  ரன்களை குவித்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கோலி சதம் விளாசி  அணியின் ரன்களை குவித்து வந்தார். ஒருகட்டத்தில் அவர் ஆட்டமிழக்க,  தோனி  ஆஸி., வீரர்களின் பந்துகளை சிதறடித்தார். இறுதியில்  6 அடித்து அடித்து பவுலர்களை களங்கடிக்கச்செய்தார். அப்போது மைதானத்தில் தோனி  இஸ் பேக் என்று சுற்றியிருந்தவர்கள்  ஆர்பரிக்க சிங்கள் எடுத்து வெற்றி எளிதாக்கினார். தினேஷ்கார்த்திக் அவருக்கு உறுதுணையாக இருந்தார்.  

இதன் மூலம் இந்திய அணி ஒருநாள் போட்டியில்1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த ஆட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள கோலி, ``ஆஸ்திரேலியா  பேட்ஸ்மேன்களை இறுதி நேரத்தில் கட்டுபடுத்த முயன்றோம். மார்க்ஸ் மற்றும் மேக்ஸ்வேல்லின்  ஒரே ஓவரில் இரண்டு விக்கெட்டுகளை பறிகொடுத்தது, ஆட்டத்தில் திருப்புமுனையாக அமைந்தது. அவர்களின் விக்கெட் இழப்பு, கடினமான இலக்கை எட்டவேண்டிய தேவையை எங்களுக்கு ஏற்படுத்தவில்லை.5 பந்துவீச்சாளர்கள் சிறப்பான முறையில் பந்துவீசினர். இதற்கு கேப்டன் என்ற முறையில் எனக்கும் பெரும் மகிழ்ச்சி. என்னால் முடிந்தவரைத் தொடர்ந்து களத்தில் நிற்க முயல்வேன். அது இலக்கை எட்டும்போது எனக்குள் மகிழ்ச்சி பிறக்கும். அணியின் வெற்றிக்கு என்னால் முடிந்தவரை பலம் சேர்த்தேன். எப்போதும் போல ஆட்டத்தின் இறுதியில் தோனி களைப்பாகிவிட்டார். இருந்தபோதிலும் தோனி இந்த போட்டியில் அவரது தனித்துவத்தை காட்டிவிட்டார். ஆட்டத்தின் போது தோனி என்ன நினைக்கிறார் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும். அதை யாராலும் கணிக்க முடியாது. அவருக்கு ஒரு ஹெட்ஸ் ஆஃப். தினேஷ்கார்த்திக்கும் சிறப்பாக விளையாடினார்'' என்றார்.