Published:Updated:

``சூழ்நிலையை எளிதாக்கும் அவர், 4 -வது வீரராகக் களமிறங்குவதே அணிக்கு நல்லது” -தோனி குறித்து ரோஹித்

``சூழ்நிலையை எளிதாக்கும் அவர், 4 -வது வீரராகக் களமிறங்குவதே அணிக்கு நல்லது” -தோனி குறித்து ரோஹித்
``சூழ்நிலையை எளிதாக்கும் அவர், 4 -வது வீரராகக் களமிறங்குவதே அணிக்கு நல்லது” -தோனி குறித்து ரோஹித்

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதிய முதலாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. பேட்டிங்கில் இந்திய அணியின் டாப் ஆர்டர் ஆட்டம் காண ரோஹித் ஷர்மா மற்றும் தோனி, அணியை பெரும் சரிவில் இருந்து மீட்டனர். 

ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி தனது 22 -வது சதத்தை அடித்தார். போட்டி முடிந்த பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தோனி குறித்தும் முதலாவது ஒருநாள் போட்டி குறித்தும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்தார். 

தோனியுடனான பார்ட்னர்ஷிப் குறித்து ரோஹித் , ``தோனியுடன் பேட் செய்வது மிக எளிது, அவர் சூழ்நிலையை எளிதாக்குவார். விரைவாக 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட காரணத்தால் தோனி முன்னதாகவே களம் இறங்கவேண்டியதாயிற்று. நாங்கள் முதலில் டார்கெட் குறித்துச் சிந்திக்கவில்லை. பார்னட்ஷிப் அமைப்பது குறித்து தான் பேசினோம். பேசியபடி செயலாற்றினோம். எங்களது பார்ட்னர்ஷிப் 100 -ஐ கடந்தபோது இனி ஓவருக்கு 6 -க்கு மேல் அடிக்க வேண்டும் என முடிவு செய்தோம். முன்னதாகவே களம் இறங்கினாலும் தோனி சிறப்பாக விளையாடினார். இது நல்ல விஷயம். அவர் எந்த இடத்தில் களமிறங்கினாலும் ரன்கள் சேர்க்க முடிகிறது. 

தோனியின் ஸ்ட்ரைக் ரேட் ஒருநாள் போட்டிகளில் 90 -ல் உள்ளது. என்னைப் பொறுத்த அவர் இன்னும் ஒருபடி முன்னதாக, அதாவது 4 -வது வீரராகக் களமிறங்கவேண்டும். ராயுடு அந்த இடத்தில் சிறப்பாக விளையாடி வருகிறார். அதில் சந்தேகம் இல்லை. ஆனாலும் தோனி முன்னதாக களமிறங்குவது அணிக்கு நல்லது என்பது எனது கருத்து. எனினும் அதனை கோச் மற்றும் கேப்டன் தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார். 

மேலும் இந்தப் போட்டியில் தோற்றாலும் நல்ல பாடமாக அமைந்ததாகத் தெரிவித்தார் ரோகித் ஷர்மா.