Published:Updated:

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பன்ட், புஜாரா முன்னேற்றம்! - முதலிடத்தைத் தக்கவைத்த விராட் கோலி

ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பன்ட், புஜாரா முன்னேற்றம்! - முதலிடத்தைத் தக்கவைத்த விராட் கோலி
ஐ.சி.சி டெஸ்ட் தரவரிசையில் பன்ட், புஜாரா முன்னேற்றம்! - முதலிடத்தைத் தக்கவைத்த விராட் கோலி

கிரிக்கெட் வரலாற்றில், ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்ற சாதனையைப் படைத்தது இந்திய அணி. இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கோலி அண்ட் கோ-வை கொண்டாடி வருகின்றனர். இந்தத் தொடரைக் கைப்பற்ற முக்கிய காரணமான அந்த வீரர், தொடர் நாயகன் விருதைத் தட்டிச்சென்றார். இப்போது ஐ.சி.சி சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையில் புஜாரா முன்னேறியுள்ளார்.

சிட்னி (193), அடிலெய்ட்(106), மெல்போர்னில் (123) நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் 3 சதங்கள் விளாசிய புஜாரா, மொத்தம் 521 ரன்கள் குவித்தார். 4-வது டெஸ்ட் போட்டியில், 193 ஆட்டமிழந்த அவர், 7 ரன்களில் இரட்டைச் சதத்தை தவறவிட்டார். நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி, சிறந்த டெஸ்ட் கிரிக்கெட்டை விளையாடினார். ஐ.சி.சி வெளியிட்ட டெஸ்ட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில், நான்காவது இடத்திலிருந்து மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார் புஜாரா. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் அசத்திய மற்றுமொரு வீரர் ரிஷப் பன்ட். விக்கெட் கீப்பரான ரிஷப் பன்ட், இந்த தொடரில் 350 ரன்கள் குவித்தார். சிட்னி டெஸ்ட் போட்டியில், 159* ரன்கள் விளாசிய பன்ட், ஆஸ்திரேலியாவில் சதமடித்த முதல் ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையும் படைத்தார். மேலும், 20 கேட்சுகள் பிடித்து அதிகம் பேரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார்.  ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய பன்ட், சர்வதேச டெஸ்ட் பேட்ஸ்மேன் வரிசையில் அதிரடியாக முன்னேறியுள்ளார். 21 இடங்கள் முன்னேறி 17-வது இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன், மகேந்திர சிங் தோனி 19-வது இடத்தைப் பிடித்ததுதான் இந்திய விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் முன்னணி வரிசையாக இருந்தது. 673 புள்ளிகளுடன் தோனியின் சாதனையை பன்ட் முறியடித்துள்ளார்.  டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில், 922 புள்ளிகளுடன் இந்திய கேப்டன் கோலி தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.