Published:Updated:

`அகங்கார மனப்பான்மையோடு செல்லாதீர்கள்' - ஆஸ்திரேலிய அணிக்கு கோலியின் நச் அட்வைஸ்!

`அகங்கார மனப்பான்மையோடு செல்லாதீர்கள்' - ஆஸ்திரேலிய அணிக்கு கோலியின் நச் அட்வைஸ்!
`அகங்கார மனப்பான்மையோடு செல்லாதீர்கள்' - ஆஸ்திரேலிய அணிக்கு கோலியின் நச் அட்வைஸ்!

ஆஷஸ் தொடரில் பங்கேற்பதற்காக இங்கிலாந்து செல்லும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அட்வைஸ் அளித்துள்ளார். 

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 - 1 என்ற கணக்கில் வீழ்த்தி தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இதன்மூலம், 72 ஆண்டுக்கால சோகத்தை முடிவுக்குக் கொண்டுவந்திருக்கிறது விராட் கோலி தலைமையிலான இந்திய இளம் படை. இந்த வெற்றிக்கு ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களின் பங்களிப்பே காரணம் என ரசிகர்கள் உச்சி முகர்ந்து பாராட்டிவருகின்றனர். இந்நிலையில், இந்தத் தொடர் முடிந்த பிறகு, ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்துக்கு எதிரான வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆஷஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. ஆஷஸ் தொடரில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய அணிக்கு, இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி அட்வைஸ் கூறியுள்ளார். 

நேற்றைய போட்டி முடிந்த பின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகத்துக்குப் பேட்டியளித்த அவர், ``அகங்கார மனப்பான்மையுடன் நீங்கள் அங்கு செல்வதாக இருந்தால், உங்களால் வெற்றிபெற முடியாது. அப்படி அங்கு செல்வது வீணான ஒன்று. ஏனென்றால், அங்கு பயன்படுத்தப்படும் டியூக்ஸ் பந்துகள் பேட்ஸ்மேன்கள் எதிர்கொள்ளச் சவாலானது. டியூக்ஸ் பந்துகள், உங்கள் ஈகோவை எளிதில் புதைத்துவிடும். உங்களை நீங்களே கட்டுப்படுத்த வேண்டும். 

ஒரு பேட்ஸ்மேனாக நீங்கள் பொறுமையாக விளையாட வேண்டும். சில நேரங்களில் விரைவில் பேட்ஸ்மேன்கள் அவுட்டாக நேரிடும். ஆனால், அதை இங்கிலாந்தில் செய்யக் கூடாது. டெஸ்ட் போட்டிகளைப் பொறுத்தவரை நீண்ட நேரம் இருக்கிறது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் ரன்களைச் சேர்க்க வேண்டும். வீசப்பட்ட பந்துகளின் எண்ணிக்கையைக்கூட பார்க்கக் கூடாது. இது, முரண்பாடான விஷயம்தான். இருப்பினும், பொறுமையாக இருந்து விளையாடினால் இதைச் சாத்தியமாக்கலாம்" என்று கூறியுள்ளார்.