Published:Updated:

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND
`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

இந்தியா - ஆஸ்திரேலிய அணிகள் மோதிய பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் இன்றுடன் முடிவுக்கு வந்தது. புஜாரா டான்ஸ், ஆட்டம் பாட்டம் என இந்திய வீரர்கள் கொண்டாடிய வீடியோக்கள் செம்ம வைரல் ஆகி வருகிறது.

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

72 ஆண்டுகளில் முதல் முறையாக இந்திய அணி ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரைக் கைபற்றி அசத்தி இருக்கிறது. இந்த வெற்றி குறித்து கோலி கூறுகையில், ``இது வரையிலான தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இது முக்கியமான வெற்றி. இந்த வெற்றியை எனது வீரர்களுடன் இணைந்து கொண்டாடப் போகிறோம்” என்றார். 

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

இன்று நடைபெற இருந்த 5 வது நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாகக் கைவிடப்பட்டது. 4 வது போட்டி டிரா என்று அறிவிக்கப்பட்டப் பின்னர், இந்திய வீரர்கள் உற்சாகமாக மைதானத்தில் வலம் வந்தனர். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் செம வைரலாகி வருகிறது. 

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

கோலி - அனுஷ்கா ஷர்மா மைதானத்தில் வலம்வர, புகைப்படங்கள் வைரல் ஹிட். கடைசியாக டிரெஸ்ஸிங் அறையில் நடைபெற்ற கொண்டாட்டங்களை பி.சி.சி.ஐ வெளியிட, ரசிகர்கள் வாழ்த்துகளை அள்ளி வீசினர்.

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

முன்னதாகக் கோப்பை வாங்குவதற்கு முன்னர் இந்திய அணியின் பன்ட், இந்திய கேப்டன் கோலி உள்ளிட்ட அனைவரையும் நடனமாடும்படி கேட்டுக்கொண்டிருக்க, புஜாரா மட்டும் கைதட்டி ரசித்துக்கொண்டிருந்தார். 

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

அவரையும் பன்ட் இழுத்து வந்து ஆடும்படி சொல்ல, எளிதாக நின்ற இடத்திலே ஓடுவது போன்று நடனமாடினர். பின்னர், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அந்த நடனம் தொடர்பாகக் கேள்வி எழுப்பப்பட்டது. 

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

அப்போது பேசிய கோலி, ``அந்த நடனம் குறித்து பன்ட்டிடம்தான் கேட்க வேண்டும். அவர்தான் அப்படியான ஸ்டெப்ஸைக் கொண்டு வந்தார். சரி என்று எல்லோரும் ஆடினோம். எதற்காக அப்படிச் செய்தார் எனத் தெரியாது. பார்ப்பதற்கும் ஆடுவதற்கும் எளிதாக இருந்தது அந்த நடனம். அதனால் ஆடினோம். 

`டிரெஸ்ஸிங் ரூம் கலாட்டா; புஜாரா டான்ஸ்!’ - சிட்னியில் இந்திய வீரர்கள் குதூகலம் #AUSvIND

ஆனால், புஜாராவால் அந்த நடனத்தைக்கூட ஆட முடியவில்லை. நீங்கள் பார்த்ததுதான் புஜாரா டான்ஸ். அவர் நடக்கும்போதுகூட தனது கைகளை அசைக்க மாட்டார்” என்றார். இந்த வீடியோவை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வெளியிட, இந்திய ரசிகர்கள் உற்சாகமானார்கள்.