Published:Updated:

72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் கிடைத்த தொடர் -ஆஸி-யில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி #AusvInd

72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் கிடைத்த தொடர் -ஆஸி-யில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி #AusvInd
72 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பின் கிடைத்த தொடர் -ஆஸி-யில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி #AusvInd

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 -வது டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம், மழை காரணமாகக் கைவிடப்பட்டது. இதனால், இந்திய அணி ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. 

Photo Credit: Twitter/BCCI

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது.  டி20 தொடர் முடிந்த பின்னர், அனைவரும் எதிர்பார்த்த டெஸ்ட் தொடர் தொடங்கியது. முதலில், வெற்றியுடன் இந்திய அணி தொடங்கினாலும், ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்று பதிலடிகொடுத்தது. 

Photo Credit: Twitter/BCCI

மூன்றாவது டெஸ்ட் போட்டியில், இந்திய அணி வென்று 2-1 என முன்னிலைபெற்றது. இந்நிலையில், சிட்னியில் 4 -வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா, புஜாரா மற்றும் பன்ட் ஆகியோரின் அபார சதத்தின் உதவியுடன் 622 ரன்கள் குவித்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலியா, 300 ரன்களில் ஆட்டமிழந்து ஃபாலோ ஆன் பெற்றது. 4 -வது நாள் ஆட்டம் மழை மற்றும் மோசமான வெளிச்சம் காரணமாக பாதிக்கப்பட்டது. 

Photo Credit: Twitter/BCCI

இந்நிலையில், தொடர் மழை காரணமாக இன்றைய 5-வது நாள் ஆட்டம் முழுமையாகப் பாதிக்கப்பட்டது. இதன் காரணமாக, 5 -வது நாள் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் சிட்னி போட்டி டிராவில் முடிந்தது. இதன் மூலம் கடந்த 72 ஆண்டுகளில், ஆஸ்திரேலியாவில் முதல் முறையாக 2-1 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது இந்தியா. 

ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதலாவது கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார், இந்திய கேப்டன் கோலி. மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வெல்லும் முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பெற்றது இந்தியா. 

Photo Credit: Twitter/BCCI

இந்த ஆட்டத்தில், 7 ரன்னில் தனது இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட புஜாரா ஆட்டநாயகனாகவும், தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். பின்னர்,  பார்டர் - கவாஸ்கர் கோப்பையைக் கோலி பெற்றுக்கொள்ள, சக வீரர்கள் அவருடன் இணைந்து கொண்டாடினார். வாழ்த்துகள் கோலி அண்ட் டீம்!