Published:Updated:

ஐபிஎல்: கொல்கத்தாவை துவம்சம் செய்தது மும்பை

ஐபிஎல்: கொல்கத்தாவை துவம்சம் செய்தது மும்பை
ஐபிஎல்: கொல்கத்தாவை துவம்சம் செய்தது மும்பை
ஐபிஎல்: கொல்கத்தாவை துவம்சம் செய்தது மும்பை

மும்பை: மும்பையில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா அணியை 65 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வீழ்த்தியது.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 53வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற மும்பை முதலில் பேட் செய்தது.

சச்சினும், வெய்ன் ஸ்மித்தும் மும்பை அணியின் இன்னிங்சை தொடங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்த நிலையில் சச்சின் 48 ரன்னில் ஆட்டம் இழந்தார். அடுத்த ஓவரில் ஸ்மித்தும் 47 ரன்னில் வெ ளியேறினார். ஆனால், கடைசி கட்டத்தில் பேட்ஸ்மேன்கள் மும்பை அணியை தூக்கி நிறுத்தினர்.

குறிப்பாக தினேஷ் கார்த்திக் அதிரடி ஜாலம் காட்டினார். இதனால் மும்பை அணி சவாலான ஸ்கோரை எட்டிப்பிடித்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது. கடைசி 5 ஓவர்களில் மட்டும் 64 ரன்களை விளாசினர்.

தினேஷ் கார்த்திக் 34 ரன்களுடன் களத்தில் இருந்தார். கொல்கத்தா தரப்பில் 2 விக்கெட் வீழ்த்திய மெக்லரன் 60 ரன்களை வாரி இறைத்தார். அதே நேரத்தில் 3 ஓவர்களில் 7 ரன்கள் மட்டுமே கொடுத்தார் பாலாஜி.

##~~##
171 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் (0), ஜான்சனின் முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். பின்னர் வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். 18.2 ஓவர்களில் அந்த அணி 105 ரன்களில் சுருண்டது. இதனால் 65 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி அபார வெற்றி பெற்றது.
12 வது ஆட்டத்தில் ஆடிய மும்பை அணிக்கு இது 8வது வெற்றியாகும். அதே சமயம் 12வது ஆட்டத்தில் விளையாடிய நடப்பு சாம்பியன் கொல்கத்தாவுக்கு இது 8வது தோல்வியாகும். இந்த தோல்வியின் மூலம் கொல்கத்தா அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து போய் விட்டது.