Published:Updated:

ஐ.பி.எல்: வெளியேறியது டெல்லி டேர்டெவில்ஸ்

ஐ.பி.எல்: வெளியேறியது டெல்லி டேர்டெவில்ஸ்
ஐ.பி.எல்: வெளியேறியது டெல்லி டேர்டெவில்ஸ்
ஐ.பி.எல்: வெளியேறியது டெல்லி டேர்டெவில்ஸ்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ராஜஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்த டெல்லி அணி போட்டியில் இருந்து பரிதாபமாக வெளியேறியது.

ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் மைதானத்தில் நடந்த 52வது லீக் ஆட்டத்தில் டெல்லி டேர்டெவில்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டா ஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. வழக்கம் போல் ஷேவாக் சொதப்பினார். 11 ரன் எடுத்த திருப்தியோடு அவர் வெளியேறினார்.  பின்னர் வந்த முரளிதரன் கவுதம் 2 ரன்னிலும், டேவிட் வார்னர் 13 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய கேப்டன் ஜெயவர்த்தனே 34  ரன்னில் வெளியேற்றத்திற்கு பிறகு, ஆஸ்திரேலியாவை சேர்ந்த பென் ரோரர் அணிக்கு கைகொடுத்தார். 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் சேர்த்தது. பென் ரோரர் 64 ரன்களுடன் களத்தில் இருந்தார்.

155 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ராஜஸ்தான் அணியின் இன்னிங்சை கேப்டன் ராகுல் டிராவிட்டும், ரஹானேவும் தொடங்கினர். இந்த சீசனில் 4வது அரைசதத்தை கடந்த டிராவிட் 53 ரன்னில் ஆட்டம் இழந்தார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 108 ரன்கள் குவித்தது.

இதையடுத்து ரஹானே- வாட்சன் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது. ராஜஸ்தான் அணி 17.5 ஓவர்களில் ஒரு விக்கெட்டுக்கு 155 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ரஹானே 63 ரன்களுடனும், வாட்சன் 28 ரன்களுடனும் ஆட்டம் இழக்காமல்இருந்தனர். ரஹானே ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

##~~##
12வது ஆட்டத்தில் ஆடிய ராஜஸ்தானுக்கு இது 8வது வெற்றியாகும். அதே சமயம் 12வது ஆட்டத்தில் விளையாடி 9வது தோல்வியை தழுவிய டெல்லி அணி பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
கடந்த ஆண்டில் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற டெல்லி அணி இந்த முறை பரிதாபமாக வெளியேறியது.