Published:Updated:

பிரசார மேடை சரிந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் படுகாயம்!

பிரசார மேடை சரிந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் படுகாயம்!
பிரசார மேடை சரிந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் படுகாயம்!

பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போது மேடை சரிந்து விழுந்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பலத்த படுகாயம் அடைந்தார். அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
 

பிரசார மேடை சரிந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் படுகாயம்!

பாகிஸ்தானில் தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசாரம் நடந்து வருகிறது. இந்த தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தாரிக் இ இன்சாப் கட்சி போட்டியிடுகிறது.

இதற்காக தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்த இம்ரான் கான், லாகூரில் நேற்றிரவு பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

லிப்ட்டுடன் கூடிய மேடையில் அவர் நின்றிருந்த போது, திடீரென ஒரு பக்கமாக சரிந்து விழுந்தது. இதில், இம்ரான் கான் தனது கட்சியினருடன், லிப்ட் மீது விழுந்தார். இதில், அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

##~~##
உடனடியாக மருத்துவமனைக்கு இம்ரான் கான் கொண்டு செல்லப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள இம்ரானுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும் அவர் அபாய கட்டத்தை தாண்டி விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.