Published:Updated:

ராகுல், குல்தீப் இன்; சிட்னி டெஸ்டில் இந்தியா பேட்டிங் #Ausvsind

ராகுல், குல்தீப் இன்; சிட்னி டெஸ்டில் இந்தியா பேட்டிங் #Ausvsind
ராகுல், குல்தீப் இன்; சிட்னி டெஸ்டில் இந்தியா பேட்டிங் #Ausvsind

சிட்னியில் நடைபெறும் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இறுதி டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

BCCI

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற்றது. மெல்போர்னில் நடந்த மூன்றாவது டெஸ்ட் தொடரில் வெற்றியை நாட்டி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது இந்திய அணி. இந்த நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 

இந்த டெஸ்ட் போட்டியில் சில மாற்றங்களுடன் களமிறங்குகிறது இந்திய அணி. ரோஹித் ஷர்மா மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோர் இந்த ஆட்டத்தில் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக லோகேஷ் ராகுல் மற்றும் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியா தரப்பில், பீட்டர்ஹான்ஸ்கம் மற்றும் லபஸ் ஜன்க் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும். இல்லாவிடில் தொடரை சமன்செய்யும் வாய்ப்பைப் பெறும்.