Published:Updated:

இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி மீது சென்னை போலீசில் புகார்!

இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி மீது சென்னை போலீசில் புகார்!
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி மீது சென்னை போலீசில் புகார்!
இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி மீது சென்னை போலீசில் புகார்!

சென்னை: இந்து கடவுளை அவமதித்த இந்திய கிரிக்கெட் கேப்டன் டோனி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார்  அளிக்கப்பட்டுள்ளது.

கிரிக்கெட் வீரர் டோனி "விஷ்ணு" வேடத்தில் 'போஸ்' கொடுக்கும் படம் ஒரு ஆங்கில வார பத்திரிக்கையில் வெளியானது. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இது தொடர்பாக டோனி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்து மக்கள் கட்சி செயலாளர் எஸ்.ஆர். குமாரவேல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் இன்று புகார் மனு கொடுத்தார்.

##~~##
அதில், "கோடிக்கணக்கான இந்துக்கள் வழிபடும் தெய்வமான விஷ்ணுவை அவமதிக்கும் வகையில் டோனி படம் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், விஷ்ணு கையில் காலணி, ஆயில்கேன், வெளிநாட்டு தின்பண்டங்கள் வைத்திருப்பது போலவும் அதில் சித்தரித்துள்ளது. இந்து மத உணர்வை புண்படுத்தும் வகையில் இந்த படம் வெளியாகி உள்ளது. எனவே, உடனடியாக டோனி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.