Published:Updated:

9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட்

9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட்

9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட்

Published:Updated:

9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட்

9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட்

9 மாத தடைக்குப் பின் முதல் போட்டி! தடுமாறிய பேங்கிராஃப்ட்

பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் 9 மாத தடைகாலம் விதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர் பேங்கிராஃப்ட், தடை காலம் முடிந்து முதல் முறையாக பிக்பேஷ் லீக் டி20 தொடரில் விளையாடினார்.

Photo Credit: ICC

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தைச் சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர், கேமரூன் பேங்கிராஃப்ட் ஆகியோருக்குத் தடை விதிக்கப்பட்டது. ஸ்மித் மற்றும் வார்னர் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தடைக்காலம் மார்ச் மாதம் வரையில் இருக்கிறது. பேங்கிராஃப்டுக்கு விதிக்கப்பட்ட 9 மாதத் தடைக்காலம் முடிவடைந்தநிலையில், அவர் உடனடியாக பிக்பேஷ் லீக் போட்டியில் பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணிக்காகக் களமிறங்கினார். 

தடைகாலம் முடிந்து 9 மாதங்கள் கழித்து முதல் போட்டியில் களமிறங்கிய பேங்கிராஃப்டுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்புக் கொடுத்தனர். ஆனால், முதல் போட்டியில் விளையாடும் அறிமுக வீரரைவிட அதிகமான பதற்றத்துடன் காணப்பட்ட பேங்கிராஃப்ட் பேட்டிங் செய்யக் களமிறங்கியபோது, தான் சந்தித்த 3-வது பந்திலேயே ஆட்டமிழந்து வெளியேறினார். தடைக்காலம் முடிந்து களமிறங்குவதால், அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. பேங்கிராஃப்ட் களமிறங்கும்போது பெர்த் ஸ்கோர்சர்ஸ் அணி, ஹோபார்ட் ஹரிகேன்ஸ் அணிக்கெதிரான போட்டியில் 16 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது. இருப்பினும் பேங்கிராஃப்ட் நீண்டநேரம் களத்தில் நிற்கவில்லை. பெர்த் அணிக்காக விக்கெட் கீப்பிங் செய்த பேங்கிராஃப்ட், 2 அசத்தலான கேட்சுகளைப் பிடித்தார். 

இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், ``போட்டிக்கு முன்னதாக அவர் பதற்றத்துடன் காணப்பட்டார். பெர்த் மைதானத்தின் டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு குறித்து பேட்ஸ்மேன்கள் சிந்திப்பது போலவே அவரது சிந்தனையும் இருந்தது. கடந்த 9 மாதங்கள் கிளப் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்ததால், இந்த மைதானத்தில் வேகப்பந்துவீச்சாளர்களின் பேஸ் எப்படி இருக்கும் என்பது குறித்தே அவர் அதிகம் சிந்தித்தார்’’என்று தெரிவித்தார். இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த பெர்த் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் மட்டுமே எடுத்தது. 108 என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய ஹோபார்ட் அணி, நிர்ணயிக்கப்பட்ட இலக்கை 17.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து எட்டியது. பெர்த் அணி, தனது அடுத்த போட்டியில் சிட்னி அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் ஜனவரி 2-ம் தேதி நடைபெறுகிறது.