Published:Updated:

`பும்ராவின் பலமே இந்த இரண்டுதான்!'‍ - ஆச்சர்யப்படும் ஜான் ரைட்

`பும்ராவின் பலமே இந்த இரண்டுதான்!'‍ - ஆச்சர்யப்படும் ஜான் ரைட்
`பும்ராவின் பலமே இந்த இரண்டுதான்!'‍ - ஆச்சர்யப்படும் ஜான் ரைட்

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் மையம் கொண்டுள்ள ‘பும்ரா புயல்’ ஆஸ்திரேலியா வீரர்களைப் பந்தாடி வருகிறது. பும்ராவின் கணிக்க முடியாத யார்கருக்கு ஆஸ்திரேலியா வீரர்கள் சரண்டர் ஆகினர். இந்திய அணிக்கு பும்ராவை அடையாளம் காட்டியது நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜான் ரைட்தான். ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் 2013-ம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஜான் ரைட் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார். மும்பை அணி அந்தச் சீஸனில் கோப்பையையும் கைப்பற்றியது.

அந்த நாள்களை நினைவுகூர்ந்த ரைட், “ 2013-ம் ஆண்டில் அகமதாபாத்தில் நடைபெற்ற டி-20 கிரிக்கெட் போட்டியில் பும்ரா விளையாடிக்கொண்டிருந்தார். அந்த இன்னிங்ஸின் கடைசி 3, 4 ஓவர்களை கவனித்தேன். மிக வேகமாக யார்கர் பந்துகளை வீசினார். அவரது பெளலிங் ஆக்‌ஷனும் கவர்ந்தது. அவரது ஒரு பந்து விக்கெட் கீப்பர் பார்த்தீவ் பட்டேலின் தலைக்கு மேல் பறந்து பவுண்டரி லைனை அடைந்தது. அப்போதுதான் பும்ராவை அடையாளம் கண்டோம்.

டி-20 கிரிக்கெட் முதல் டெஸ்ட் கிரிக்கெட் வரை வளர்ச்சி அடைந்துள்ளார். சில சமயங்களில் இது சரியாக நடக்காமல்கூட போகும். ஆனால், பும்ரா விஷயத்தில் அவ்வாறு இல்லை. இதற்கான எல்லா புகழும் அவரைதான் சேரும். அவரை அடையாளம் கண்டோம், அவ்வளவுதான். ஒரு வீரராக அவர் தன்னை மேம்படுத்திக்கொண்டார். ஆஸ்திரேலியாவில் அவரது பந்துவீச்சை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரது பலமே அக்‌ஷனும், பேஸும்தான். மூன்று விதமான கிரிக்கெட்டும் அவரைத் தன்னை தயார்படுத்திக்கொண்டது ஆச்சர்யப்பட வைக்கிறது'' என்றார்.