Published:Updated:

ஐ.பி.எல்: மில்லரின் அதிரடி சதத்தில் வீழ்ந்தது பெங்களூர்!

ஐ.பி.எல்: மில்லரின் அதிரடி சதத்தில் வீழ்ந்தது பெங்களூர்!
ஐ.பி.எல்: மில்லரின் அதிரடி சதத்தில் வீழ்ந்தது பெங்களூர்!
ஐ.பி.எல்: மில்லரின் அதிரடி சதத்தில் வீழ்ந்தது பெங்களூர்!

மொகாலி: மொகாலியில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்சுக்கு எதிரான ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி டேவிட் மில்லரின் அதிரடி சதத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மொகாலியில் நடந்த 51வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதியது. டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் கில்கிறிஸ்ட், பெங்களூர் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார். தொடக்க ஆட்டக்காரர்களாக புஜாரா, கெய்ல் ஆகியோர் களம் இறங்கினர். கெய்ல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை காட்டி ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். அவருக்கு பக்கபலமாக புஜாராவும் அடித்து ஆடினார்.

அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கெய்ல் 27 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்சருடன் அரை சதத்தை எட்டினார். இந்த சீசனில் கெய்ல் அடித்த 3வது அரை சதமாகும்.  12வது ஓவரில் மன்பிரீத் கோனி வீசிய முதல் பந்தில் சிக்சர் தூக்கிய கெய்ல் அடுத்த பந்தில் ஆட்டம் இழந்தார். 33 பந்துகளில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 61 ரன் குவித்தார் கெய்ல்.

அடுத்து கேப்டன் விராட்கோலி, புஜாராவுடன் இணைந்தார். காயத்தில் இருந்து மீண்டு இந்த சீசனில் முதல் ஆட்டத்தில் ஆடிய புஜாரா 45 பந்துகளில் 8 பவுண்டரியுடன் முதல் அரை சதத்தை பூர்த்தி செய்தார். சிறப்பாக ஆடிய புஜாரா 48 பந்துகளில் 8 பவுண்டரியுடன் 51 ரன் எடுத்த நிலையில் மன்பிரீத் கோனி பந்து வீச்சில் ஆட்டம் இழந்தார். விராட் கோலி 14 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார்.

இதையடுத்து,  ஹென்ரிக்ஸ், டிவில்லியர்சுடன் இணைந்தார். தொடக்க ஆட்டக்காரர்கள் அமைத்து கொடுத்த நல்ல அடித்தளத்தை பயன்படுத்தி இருவரும் கடைசி கட்டத்தில் அதிரடி காட்டினர். இதனால் ரன் விகிதம் தொடர்ந்து அதிகரித்தது. கடைசி ஓவரில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 21 ரன் எடுக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. டிவில்லியர்ஸ் 19 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 38 ரன்னும், ஹென்ரிக்ஸ் 7 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 16 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர்.

191 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷான் மார்ஷ் (6), மன்தீப்சிங் (1) மற்றும் குர்கீரத்சிங் (20), டேவிட் ஹஸ்ஸி (13) ஆகியோர்  சொற்ப ரன்னில் வீழ்ந்தனர். அப்போது பஞ்சாப் அணியின் ஸ்கோர் 9.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 64 ரன்னாக இருந்தது.!

5வது விக்கெட்டுக்கு தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேவிட் மில்லருடன், தமிழக வீரர் ஆர்.சதீஷ் ஜோடி சேர்ந்தார். டேவிட் மில்லர் அதிரடி காட்டினார். அவருக்கு பக்கபலமாக சதீஷ் இருந்தார். 18 ஓவர்களில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 4 விக்கெட் இழப்புக்கு 194 ரன் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

##~~##
கடைசி பந்தில் டேவிட் மில்லர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் அவர் ஐ.பி.எல். போட்டியில் தனது முதல் சதத்தையும் பதிவு செய்தார். டேவிட் மில்லர் 38 பந்துகளில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 101 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். சதீஷ் 18 பந்துகளில் 2 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 27 ரன்னுடன் களத்தில் இருந்தார்.
11வது ஆட்டத்தில் விளையாடிய பஞ்சாப் அணி பெற்ற 5-வது வெற்றி இதுவாகும். 12வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூர் சந்தித்த 5வது தோல்வி இது.