Published:Updated:

இந்து கடவுளை அவமதித்ததாக டோனி மீது வழக்கு!

இந்து கடவுளை அவமதித்ததாக டோனி மீது வழக்கு!
இந்து கடவுளை அவமதித்ததாக டோனி மீது வழக்கு!
இந்து கடவுளை அவமதித்ததாக டோனி மீது வழக்கு!

பெங்களூர்: இந்து கடவுளான விஷ்ணு போல "போஸ்" கொடுத்துள்ள இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சி்ங் மீது நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திரசிங் டோனி, ஒரு வணிக பத்திரிகை விளம்பரத்துக்கு, இந்து கடவுளான விஷ்ணு போல "போஸ்" கொடுத்துள்ளார்.

விஷ்ணுவின் கையில் ஆயுதம் இருப்பதற்கு பதிலாக டோனியின் கையில் ஷூ வைத்திருப்பது போல அந்த காட்சி உள்ளது.

இதனை எதிர்த்து பெங்களூரை சேர்ந்த ஜெயகுமார் ஹைர்மேத் என்பவர், 6வது கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார்.

##~~##
அந்த மனுவில், இந்த விளம்பரம் மூலமாக இந்துக்களின் மனதை, டோனி புண்படுத்திவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட மாஜிஸ்திரேட் சூரிகான், வரும் 12ஆம் தேதி விசாரணை நடைபெறும் என்று அறிவித்தார்.