Published:Updated:

வேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் - ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு

வேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் - ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு
வேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் - ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 3-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற 399 ரன்கள் இலக்காக நிர்ணயம் செய்துள்ளது இந்திய அணி. 

வேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் - ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு

Photo:Twitter/ICC

ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வரும் 3-வது டெஸ்ட் போட்டி பரபரப்பானக் கட்டத்தை எட்டியுள்ளது. முதல் இரண்டு நாள்கள் இந்திய அணி நிதானமாக விளையாடி 7 விக்கெட் இழப்புக்கு 443 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது. அதன் பின்னர் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி பும்ராவின் வேகத்தில் 151 ரன்னில் சுருண்டது. 

வேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் - ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு

Photo:Twitter/BCCI

ஃபாலோ-ஆன் கொடுக்காமல் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியை ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ் கட்டுப்படுத்தினார். 3-வது நாளில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்நிலையில் இன்று 4 -வது நாள் ஆட்டம் தொடங்கியது. 

ஆடுகளம் தொடர்ந்து பந்துவீச்சுக்குச் சாதகமாக இருக்க, இந்திய வீரர்கள் அதிரடியாக விளையாடினர். மயங்க் அகர்வால் லயனின் ஒரே ஓவரில் 2 சிக்ஸர்கள் பறக்க விட்டு அதிரடி காட்டினார். தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அகர்வால் 42 ரன்னில் கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் களமிறங்கிய ஜடேஜா 5 ரன்னில் நடையைக் கட்டினார். 

வேகம் காட்டிய இந்திய வீரர்கள்; கட்டுப்படுத்திய கம்மின்ஸ் - ஆஸி., வெற்றிபெற 399 ரன்கள் இலக்கு

Photo:Twitter/BCCI

அதன் பின்னர் பன்ட், ஹேசில்வுட் பந்துவீச்சில் சிக்ஸர் அடித்து, அடுத்த பந்திலே ஆட்டமிழந்தார். 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி டிக்ளேர் செய்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் கம்மின்ஸ் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு 399 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய அணி தற்போது பேட் செய்து வருகிறது.