Published:Updated:

வர்றார் அடுத்த சச்சின்!

வர்றார் அடுத்த சச்சின்!

பிரீமியம் ஸ்டோரி

பிரித்வி ஷா... அடுத்த 15 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட் உலகம் உச்சரிக்கப்போகும் பெரும் பெயர் இது. கிரிக்கெட் கடவுள் சச்சின் தனது  18 வயதில் எவ்வாறான ஆட்டத்தை வெளிப் படுத்தினரோ, சிறு பிசிறும் இல்லாமல் அதை அப்படியே முப்பதாண்டுகள் கழித்து பிரதியெடுக்கிறார் இவர். டெண்டுல்கரின் ஸ்ட்ரெயிட் டிரைவ், பிரையன் லாராவின் பேக் லிஃப்ட், கோஹ்லியின்  கவர் ட்ரைவ் என கிளாசிக் ஷாட்களை கனக் கச்சிதமாக அடிக்கிறார். ஆஃப் ஸ்டம்பை நோக்கி வரும் பந்தை பேக் ஃபூட்டால் டீப் கவர் பாயின்ட்டில் அடிப்பது தான் இவரது ஸிக்னேச்சர் ஷாட். ஒரு தலைவன் உருவாகிறான்.

வர்றார் அடுத்த சச்சின்!

ஸ்கூல் பையன்!

தனது 15 வயதில் 330 பந்துகளில் 546 ரன்கள் எடுத்து சச்சினின் உடைக்க முடியாத சாதனையை தகர்த்த பெருமைக்குரியவர் பிரித்வி ஷா. அதற்குப் பின் உள்ளூர் கிரிக்கெட்டின் அதிகபட்ச நிலையான ரஞ்சிக் கோப்பை அணியில் இடம் பிடித்தார்.

வர்றார் அடுத்த சச்சின்!

தனக்கு வருகிற முதல் பந்தை மிஸ் செய்வதே இவரின் ஸ்டைல். பெரும்பாலும் முதல் ஓவர் இவருக்கு சற்று மந்தமாகத் தான் ஆரம்பிக்கும். ஒரு பெளலரைக் கணிக்க இவர் எடுத்துக் கொள்வது அதிகபட்சம் இரண்டு பந்துகள்தான், மிஞ்சிப் போனால் ஒரு ஓவர்... அதன் பின் இவருக்கு சாதகமாகத்தான் பந்து வீசுகிறார்களோ?? என்று யோசிக்கும் அளவுக்கு ஆடத் தொடங்கிவிடுவார், அதிலும் ரஞ்சி கோப்பையிலும், துலீப் கோப்பையிலும் முதல் போட்டியில் இவரடித்த முதல் சதத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்து விட முடியாது.

எதிரில் பந்து வீசுவது எவ்வளவு பெரிய பெளலராக இருந்தாலும் சரி, பொடியனாக இருந்தாலும் சரி, ஆட்டத்தின் முதல் பந்தாக இருந்தாலும் சரி, வெற்றியை தீர்மானிக்கும் கடைசிப் பந்தாக இருந்தாலும் சரி... ப்ரஷரை மூளைக்கு கடத்துவதில்லை பிரித்வி ஷா, நிதானமாக அதே சமயம், விக்கெட்டை பறிகொடுக்காமல்  நின்று ஆடுவதில் கைதேர்ந்தவர் அவர். இவ்வளவு திறமைகள் இருப்பவருக்கு வயது 18 தான் என்றால் நம்ப முடியாததாகத்தான் இருக்கிறது, இந்திய ஜுனியர் அணியின் பயிற்சியாளர் டிராவிட்டாலேயே இவரின் ஆட்டத்தை இன்று வரை நம்ப முடியவில்லை. அடிக்கடி தன் சிஷ்யனின் ஆட்டத்தைப் பார்த்து பிரமித்துப் போகிறார்.

வர்றார் அடுத்த சச்சின்!

142 கிமீ வேகத்தில் வரும் பந்தை ஃப்ளிக் செய்து மிட் ஆஃபில் சிக்சராக்குவதாக இருக்கட்டும், நல்ல லென்த்தில் வருகிற ஒரு பந்தையும் மிஸ் செய்யாமல் கவர் டிரைவ் கொண்டு பவுண்டரிகளாக மாற்றுவதாக இருக்கட்டும் ஓவ்வொரு ஷாட்டிலும் அத்தனை துல்லியம்.

சச்சின், கோலிக்கு அடுத்து பிரித்வி ஷாவின் காலம் ஆரம்பமாகிறது!

- பொ.மாரியப்பன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு