Published:Updated:

கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!
கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

பிரீமியம் ஸ்டோரி

டுத்த மாதம் ஒரு கிரிக்கெட் உலகக்கோப்பை இருக்கு தெரியுமா? பெண்கள் டி20 உலகக்கோப்பைக்காக பரபரவென தயாராகிவருகிறது ஐசிசி. 

கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

கிரிக்கெட்டை ஒரு திருவிழா போல் கொண்டாட்ட மனப்பான்மையுடன் அணுகும் கரீபிய மண்ணில் தான்  பெண்களுக்கான ஆறாவது டி20 உலக கோப்பை நடக்க இருக்கிறது. வருகிற நவம்பர் 9-ம்  தொடங்கி நவம்பர் 24 முதல் நடக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் நேரடியாக விளையாடத் தகுதிபெற்றுவிட்டன.

கடந்த ஜூலை மாதம் நடந்த தகுதிச்சுற்றில்  வங்கதேசம், அயர்லாந்து அணிகள் தகுதிபெற்றன. ஆக மொத்தம் 10 அணிகள் 2018 டி20 உலகக்கோப்பைக்காக மோதவிருக்கின்றன.

கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

ஆஸ்திரேலியாவுடன் இந்தியா!

கயனா, செயின்ட் லூசியா, ஆன்டிகுவா ஆகிய மூன்று நகரங்களில் நடக்கவிருக்கும் இத்தொடரில் பங்கேற்கும் பத்து அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.குரூப் ஏ-வில் கடந்த முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, பங்களாதேஷ், இலங்கை ஆகிய அணிகளும் குரூப் பி-வில் இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், அயர்லாந்து ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இறுதியில், இரண்டு குரூப்களிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். நவம்பர் 24 -ம் தேதி சர் விவ் ரிச்சர்ட்ஸ் ஸ்டேடியத்தில் இறுதிப்போட்டி நடக்கிறது. இத்தொடரின் தொடக்க போட்டியில் நியூசிலாந்துடன் இந்திய அணி மோதுகிறது. DECISION REVIEW SYSTEM (DRS) முறை முதல் முறையாக பெண்கள் டி20 உலக கோப்பையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இந்திய அணி எப்படி?

இத்தொடரில் விளையாட தேர்வுசெய்யப்பட்டிருக்கும் இந்திய அணியைப் பார்க்கும் போது தோனி தலைமையிலான 2007-ம் ஆண்டு டி20 உலக கோப்பையை வென்ற அணி நினைவுக்கு வருகிறது. அதேப்போல் இளைஞிகள் அதிகம் கொண்ட அணியை  தேர்வு செய்துள்ளது பிசிசிஐ.

கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

அணி வீராங்கனைகளின் சராசரி வயது 24 தான். அணியில் ஏழு வீராங்கனைகள் 15 போட்டிகளுக்கும் குறைவான டி20 போட்டிகளே விளையாடி உள்ளனர். அனுபவம் குறைவு என்றாலும் உடல் தகுதியிலும் மனதளவிலும் நம் வீராங்கனைகள் செம ஸ்ட்ராங் என்பதே ஃபீட்பேக்.

இந்திய அணியைப் பொருத்தவரை கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர், ஸ்ம்ரிதி மந்தனா, மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் இருப்பதால் பேட்டிங் வரிசை மிரட்டலாக இருக்கிறது. இவர்கள் போக இலங்கை தொடரில் ஆல்ரவுன்டராக ஜொலித்த ஜூனியர் வீராங்கனை ஜெர்மியா ரோட்ரிகஸ் உலகக் கோப்பையிலும் தன்னுடைய ஃபார்மை தொடர்வார் என எதிர்பார்க்கலாம் .

பேட்டிங் ஸ்ட்ராங். ஆனால், இந்திய அணியின் பெரும் கவலையே பௌலிங்தான்.அணியின் சீனியர் வீரங்கனையான ஜுலன் கோஸ்வாமி டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு அறிவித்த நிலையில் வேகப்பந்து வீச்சு மிகவும் சுமாராக இருக்கிறது. மான்ஸி ஜோஷி, அருந்ததி ரெட்டி ஆகியோரின் பெளலிங் உலகக்கோப்பையில் சிறப்பாக இருந்தால் மட்டுமே இந்திய அணி தப்பிக்கும்.  லெக் ஸ்பின்னர் பூனம் யாதவ் இந்திய அணியின் பலம்.  அவருக்கு பக்கபலமாக ஆஃப் ஸ்பின்னர் அனுஜா பாட்டில்.

கப் அடிக்கப்போறாங்க கேர்ள்ஸ்!

ஆஸ்திரேலியாதான் டாப்!

இந்திய அணி இடம் பிடித்திருக்கும் குரூப் பி-ஐப் பொருத்தவரை மூன்று முறை சாம்பியனான ஆஸ்திரேலியாதான் ஸ்ட்ராங்கான அணி. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பலமான அணியை சமாளிப்பது  இந்திய அணிக்கு பெரும் சவாலாக இருக்கும்.  இந்த இரு அணிகளையும் தாண்டி லீக் போட்டியின் முடிவில் முதல் இரண்டு இடத்தை பிடிக்க வேண்டும். அப்போதுதான் அரைஇறுதிக்குத் தகுதி பெற முடியும்.

கமான் கேர்ள்ஸ்!

- கி.ராம் கார்த்திகேயன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு