பிரீமியம் ஸ்டோரி

டாப் ஆர்டர் பிரமாதம், புவி-பும்ரா வேகப்பந்துவீச்சில் சூப்பர், சாஹல்-குல்தீப் ஸ்பின்னில் கலக்கல் என ஒரு ஃபார்முக்கு வந்துவிட்டது இந்திய அணி. ஆனால் இன்னும் செட் ஆகாமல் சொதப்புவது மிடில் ஆர்டர் மட்டுமே. இந்த மிடில் ஆர்டர் வரிசையில் முக்கியமானது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் இடம். ஆமாம்... இப்போது தலைமேல் கத்தி இருப்பது தோனிக்குத்தான்.

``2019 உலகக்கோப்பையில் விளையாட வேண்டும் என்றால் தோனி தன்னுடைய ஆட்ட முறையை மாற்றிக்கொள்ள வேண்டும். அவர் இன்னிங்ஸை பில்ட் செய்ய வேண்டும். ஆனால், கடந்த ஓராண்டாகவே அவர் இதைச் சரிவரச் செய்யவில்லை.’’ இப்படி தோனியின் பர்ஃபாமென்ஸைப் பற்றி வெளிப்படையாகவேப் பேசியிருக்கிறார் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி.

இப்போது தோனியை ஓரங்கட்டும் வேலைகள் வெளிப்படையாகவே நடக்க ஆரம்பித்துவிட்டன. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் சேர்க்கப்பட வில்லை. ‘‘ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான். தோனி நிச்சயம் 2020-ல் நடக்கும் டி20 உலகக் கோப்பையில் விளையாட மாட்டார்.

2020 உலகக் கோப்பைக்கான அணியை தயார்படுத்துவதில் தேர்வாளர்கள் கவனம் செலுத்துவதால் தோனியைச் சேர்க்கவில்லை’’ என்று சொல்லியிருக்கிறார் கங்குலி.

2019 உலகக்கோப்பை - தேவையா தோனி?

டி20 கிரிக்கெட் அணியில் தோனி சேர்க்கப்படாததை வைத்தே டெஸ்ட் கிரிக்கெட் போலவே டி20 கிரிக்கெட்டில் இருந்தும் தோனி ஓய்வுபெற்று விட்டதாகத்தான் புரிந்துகொள்ளவேண்டும். மிச்சம் இருப்பது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே.

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் 2019 உலகக்கோப்பை வரை மட்டும்தான் தோனி அணியில் இருக்கவிரும்புகிறார் என்பதும் 2019 உலகக்கோப்பை வரை அவரை கன்சிடர் செய்யலாம் என பிசிசிஐ-நினைப்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது.

ஆனால், தோனியின் சமீபத்திய பேட்டிங் பர்ஃபாமென்ஸ், குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அவரது ஆட்டம் எல்லாமே மிகவும் சுமாராக இருப்பதால் அவர் அணியில் இருந்து வெளியேற்றப் படக்கூடும் என்கிற சூழல் உருவாகியிருக்கிறது. ஆனால், 2019 உலகக்கோப்பை வரை தோனி அணியில் இருக்க வேண்டும். ஏனென்றால்...

2019 உலகக்கோப்பை - தேவையா தோனி?

சூப்பர் சீனியர்!

தற்போதைய இந்திய அணியில் சீனியர் வீரர் தோனிதான். 2011 உலகக்கோப்பையை வென்ற அனுபவம், 2015 உலகக்கோப்பையில் அரை இறுதிவரை அழைத்துச்சென்ற அனுபவம் எனத் தற்போதைய கேப்டன் விராட் கோலியை வழிநடத்த அணிக்குள் தோனியைத் தவிர வேறு ஆள் இல்லை. முன்னாள் கேப்டனாகவும், சீனியர் வீரராகவும் ஃபீல்டிங் பொசிஷன்ஸ், பெளலிங் ரொட்டேஷன், இக்கட்டான நேரத்தில் எடுக்க வேண்டிய முடிவுகள் என எல்லாவகையிலும் கோலிக்கு ஃபீல்டில் உதவியாக நிற்கக்கூடிய அத்தனை தகுதிகளும் தோனிக்கு மட்டுமே இருக்கிறது.

2019 உலகக்கோப்பை - தேவையா தோனி?

ஃபினிஷர்!

இதுவரை 321 ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருக்கிறார் தோனி. நான்காவது அல்லது ஐந்தாவது டவுனில் விளையாட வந்து கிட்டத்தட்ட 10,000 ரன்கள் என்னும் மாபெரும் மைல்கல்லைத் தொட்டிருக்கிறார் தோனி. இந்தியாவின் மிகச்சிறந்த ஃபினிஷர் எனக் கொண்டாடப்பட்டவர். சமீபத்திய போட்டிகளில் வேகமாக ஆடவில்லை என்பதற்காக அவரைக் கடுமையாக விமர்சிப்பது என்பது சரியான முடிவாக இருக்காது. உலகக்கோப்பைகளை வென்று தந்த கேப்டனுக்கு பிரஷரைக் குறைத்து அவரை ஆட்டத்தில் கவனம் செலுத்தவைக்கவேண்டும். அப்படிச் செய்வதே அவருக்கு செலுத்தும் மரியாதை!

2019 உலகக்கோப்பை - தேவையா தோனி?

சிறந்த விக்கெட் கீப்பர்!

தோனியின் பேட்டிங் வேகம் குறைந்திருக்கலாம். ஆனால் அவரின் ஸ்டம்ப்பிங் வேகமும், எகிறி துடித்துப் பிடிக்கும் கேட்ச்களின்  வேகமும் ஒரு மில்லி செகண்ட்கூட குறையவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் கீமோ பாலை 0.08விநாடிகளில் ஸ்டம்ப்பிங் செய்துவியக்கவைத்தார் தோனி.

2019 உலகக்கோப்பை - தேவையா தோனி?

அதேப்போல் பாய்ந்து பிடிப்பதிலும், துரத்திச்சென்று கேட்ச் பிடிப்பதிலும், ரன் அவுட் செய்வதிலும் தோனியின் வேகம் வியக்கவைக்கிறது. ஸ்டம்ப்புக்குப் பின்னாலிருந்து எதை ரிவியூ கேட்கவேண்டும், எதைக் கேட்கவேண்டாம் என்பதைச் சரியாகக் கணித்து சொல்வதிலும் தோனியை மிஞ்ச ஆள் இல்லை.

டிசிஷன் ரிவியூ சிஸ்டம் என்பதை தோனி ரிவியூ சிஸ்டம் என்று சொல்லும் அளவுக்கு தோனியின் கணிப்புகள் என்றுமே பொய்யானதில்லை. இது கேப்டன் கோலிக்கு மிகப்பெரிய ப்ளஸ். அணிக்கு மிகப்பெரிய பலம்.

2019 உலகக்கோப்பை - தேவையா தோனி?

ஃபிட்னஸ்!

கிரிக்கெட் கரியரில் தனது கடைசி வருடத்தில் இருக்கிறோம் என்பதை தோனியும் உணர்ந்தே இருக்கிறார். இன்னும் ஒரு வருடத்தில் 2019 உலகக்கோப்பை முடிந்திருக்கும். அதுவரை தன்னை ஃபிட்டாக வைத்துக்கொள்ளத்தான் கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கிறார் தோனி. யோ-யோ டெஸ்ட் உள்பட அத்தனை ஃபிட்னஸ் தேர்வுகளிலும் தோனி ஆல் பாஸ்தான். தோனிக்கு ஃபிட்னஸ் தடையாக இல்லை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு