பிரீமியம் ஸ்டோரி

ந்தாவது முறையாக ஃபார்முலா-1 சாம்பியனாகியிருக்கிறார் லூயிஸ் ஹாமில்ட்டன்.  2018 சீசனில் 9 ரேஸ்களை வென்ற ஹாமில்ட்டன், கடந்த 5 ஆண்டுகளில் நான்காவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். சாதனை நாயகன் மைக்கேல் ஷூமேக்கரைவிட இரண்டு டைட்டில்கள்தான் குறைவு. அதை சமன் செய்ய, இந்த 33 வயது மெர்சிடஸ் வேகத்துக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக நம்புகிறது ரேஸிங் உலகம். விர்ர்ர்ரூம் வீரன்!

டைம் அவுட்
டைம் அவுட்

ல் கிளாசிகோ போட்டியில் 5-1 என்ற கோல் கணக்கில் ரியல் மாட்ரிட் அணியைப் பந்தாடியிருக்கிறது பார்சிலோனா. 10 ஆண்டுகளுக்குப் பிறகு மெஸ்ஸி, ரொனால்டோ இருவருமே இல்லாமல் ஆடப்பட்ட இந்தப் போட்டியில் பரபரப்புக்குப் பஞ்சமே இல்லை. சுவாரஸ் ஹாட்ரிக் கோல் அடித்து தெறிக்கவிட, இந்த லா லிகா சீசனின் 4-வது தோல்வியைச் சந்தித்தது ரியல் மாட்ரிட். 'மெஸ்ஸி இருந்திருந்தா 10 கோல் போயிருக்கும்' என்று பார்சிலோனா ரசிகர்கள் உசுப்பேற்ற, 'ரொனால்டோ இருந்திருந்தா டஃப் கொடுத்திருக்கலாமோ' என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள் மாட்ரிட் ரசிகர்கள். சுவாரஸ் சுவாரஸ்யங்கள்!

டைம் அவுட்

 ஓய்வை நெருங்குகிறார் மித்தாலி ராஜ். இந்திய பெண்கள் கிரிக்கெட்டின் முன்னாள் கேப்டனான மித்தாலி ராஜின் கடைசி சர்வதேச தொடராக நவம்பரில் நடக்கும் டி20 உலகக்கோப்பை இருக்கலாம். ஆனால், 35 வயதிலும் ரன்களில் தெறிக்கவிடுகிறார் மித்தாலி. சமீபத்தில் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக நடைபெற்ற 20/20 போட்டியில் 61 பந்துகளில் 105 ரன்கள் என கெத்து காட்டியிருக்கிறார் மித்தாலி! பட்டாசு...மிட்டாசு!

டைம் அவுட்

தத்தை நோக்கி முன்னேறிக்கொண்டிருக்கிறார் ரோஜர் ஃபெடரர். ஸ்விஸ் இன்டோர் கோப்பை ஃபைனலில் 7-6(7-5), 6-4 என்ற நேர் செட் கணக்கில் மரியஸ் கோபலை வீழ்த்தி, தன் 99-வது பட்டத்தைக் கைப்பற்றியிருக்கிறார். 37 வயதிலும் இளம் வீரர்களைப் பந்தாடிக்கொண்டிருக்கும் இந்த மாவீரன், 109 பட்டங்கள் கைப்பற்றிய ஜிம்மி கானர்ஸின் சாதனையை முறியடித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. தனியொருவன்!

டைம் அவுட்

மான்செஸ்டர் யுனைடட் ஸ்டார் பால் போக்பா எது செய்தாலும் ட்ரெண்ட்தான். எவர்டன் அணிக்கெதிரான ஆட்டத்தில் போக்பா அடித்த பெனால்ட்டிதான் இப்போதைய வைரல் ட்ரெண்டிங். பெனால்ட்டியை அடிப்பதற்கு முன் ஸ்லோ ஜாகிங்கில் 26 ஸ்டெப் எடுத்து அடிக்க, அதை எவர்டன் கீப்பர் தடுத்துவிட்டார். ரீ பௌண்டில் கோல் அடித்திருந்தாலும், போக்பாவின் அந்த பெனால்ட்டியை நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள். '100 மீட்டர் ஓட்டத்தில் உசேன் போல்ட் கூட இத்தனை ஸ்டெப் ஓடியிருக்க மாட்டார்' என்று மீம்களைப் பறக்கவிடுகிறார்கள். செம போங்குப்பா!

டைம் அவுட்

 பாகிஸ்தான் அணியிடம் செமத்தியாக அடி வாங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா. டெஸ்ட் தொடரில் தொடங்கிய தோல்வி, டி-20 வைட்வாஷ் என தொடர, ஆஸி ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்களும் செம அப்செட். பரிசளிப்பு விழாவில், ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபின்ச்சிடம் ‘பேட் லக் ஆரோன்' என்று ரமீஸ் ராஸா ஆறுதல் சொல்ல, "பேட் லக் எல்லாம் இல்லை. எங்கள் ஆட்டம் படுமோசமாக இருக்கிறது" மனம் நொந்து பேசினார் ஃபின்ச். கங்காருவை கதறவிடுறாய்ங்களே!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு