Published:Updated:

7 வயது இணை கேப்டனுடன் டாஸ் போட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் -பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா பேட்டிங்

7 வயது இணை கேப்டனுடன் டாஸ் போட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் -பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா பேட்டிங்
7 வயது இணை கேப்டனுடன் டாஸ் போட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் -பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா பேட்டிங்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி, முதலில் பேட் செய்ய முடிவுசெய்தார். 

7 வயது இணை கேப்டனுடன் டாஸ் போட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் -பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா பேட்டிங்

Photo: Twitter/BCCI

இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்ற சமனில் முடிய, பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கியது டெஸ்ட் தொடர். அடிலெய்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிபெற்றது. பெர்த் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்று தொடரைச் சமன்செய்தது. 

7 வயது இணை கேப்டனுடன் டாஸ் போட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் -பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா பேட்டிங்

இந்நிலையில், இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் விளையாடும் பிளேயிங் லெவன் பட்டியலை இந்திய அணி நேற்றே அறிவித்துவிட்டது. கடந்த போட்டிகளில் தொடர்ந்து சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் கே.எல். ராகுல் ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர். அவர்களுக்குப் பதிலாக, ஹனும விஹாரி மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் தொடக்க வீரர்களாக இறங்க உள்ளனர். அதேபோன்று, ரோகித் ஷர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

7 வயது இணை கேப்டனுடன் டாஸ் போட வந்த ஆஸ்திரேலிய கேப்டன் -பாக்ஸிங் டே டெஸ்ட்டில் இந்தியா பேட்டிங்

Photo: Twitter/BCCI

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த தினம் தொடங்கும் இந்தப் போட்டியை பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி என்று அழைப்பார்கள். பாக்ஸிங் டே கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய  அணியின் கேப்டன் கோலி, பேட்டிங்கைத் தேர்வுசெய்தார். ஆஸ்திரேலிய கேப்டன் பெயின் டாஸ் போட, 7 வயது இணை கேப்டன் ஆர்ச்சியுடன் மைதானத்துக்கு வந்தார். இதயக் குறைபாடு கொண்ட இந்தச் சிறுவனுக்கு கிரிக்கெட் என்றால் உயிர். இந்தப் போட்டிக்கான 15 வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்த ஆர்ச்சி, இணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டார். 

 தொடரில் முன்னிலை பெற இரு அணி வீரர்களும் கடுமையாகப் போராடுவார்கள் என்பதால், பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இருந்தே அனல் பறக்கும்.