Published:Updated:

விஜய், ராகுல் நீக்கம் -அதிரடியான மாற்றங்களுடன் இந்திய அணியின் பிளேயிங் லெவன் #BoxingDay

விஜய், ராகுல் நீக்கம் -அதிரடியான மாற்றங்களுடன் இந்திய அணியின் பிளேயிங் லெவன் #BoxingDay
விஜய், ராகுல் நீக்கம் -அதிரடியான மாற்றங்களுடன் இந்திய அணியின் பிளேயிங் லெவன் #BoxingDay

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதிரடியான பல மாற்றங்களுடன் இந்தியா நாளை களமிறங்க உள்ளது. 

Photo: Twitter/BCCI

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடிவருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியை இந்தியா வென்ற நிலையில், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது.  தொடர்  தற்போது 1-1 என சமநிலையில் இருக்க, நாளை மூன்றாவது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் தொடங்க உள்ளது. 

கிறிஸ்துமஸ் தினத்துக்கு அடுத்த நாள் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டி,  `பாக்ஸிங் டே’ என்று அழைக்கப்படும். அதிக முக்கியத்துவம் வாய்ந்த பாக்ஸிங் டே போட்டிக்கான இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு போட்டியில் சொதப்பிய தொடக்க ஆட்டக்காரர்களான முரளி விஜய் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, மயங்க் அகர்வால் மற்றும் ஹனும விஹாரி ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்க உள்ளனர்.

கடந்த போட்டியில் வாய்ப்பைத் தவறவிட்ட ரோகித் ஷர்மா, இந்தமுறை பிளேயிங் லெவனில் இடம் பிடித்துள்ளார். அதேபோன்று உமேஷ் யாதவுக்குப் பதிலாக ஜடேஜா சேர்க்கப்பட்டுள்ளார். தமிழக வீரர் அஷ்வின் இன்னும் முழுமையாகத் தயார் ஆகாததால், இந்தப் போட்டியிலும் வாய்ப்பைத் தவறவிட்டுள்ளார்.

மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கான அணி: 

விராட் கோலி, ரஹானே, மயங்க் அகர்வால், ஹனும விஹாரி, புஜாரா, ரோகித் ஷர்மா, ரிஷப் பன்ட், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, பும்ரா.