

ஜெய்ப்பூரில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். போட்டியில் புனே வாரியர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது. 12 போட்டியில் விளையாடிய புனே வாரியர்ஸ் அணி 10 போட்டிகளில் தோல்வி அடைந்த ஐ.பி.எல் போட்டியில் இருந்து வெளியேறியது.
ஜெய்ப்பூரில் நடந்த 50வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த புனே அணியின் தொடக்க வீரர்கள் ராபின் உத்தப்பாவும், கேப்டன் ஆரோன் பிஞ்சும் வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தனர்.
முதல் விக்கெட்டுக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது இந்த ஜோடி பிரிந்தது. 45 ரன் எடுத்த பிஞ்சு, கெவோன் ஹூப்பரின் பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து களம் இறங்கிய யுவராஜ் சிங் 15 ரன்னிலும், உத்தப்பா 54 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
இதன் பிறகு மிட்செல் மார்ஷ் (35), மேத்யூஸ் (18) ஆகியோரும் கைகொடுக்க புனே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது.
##~~## |