Published:Updated:

‘ஐபிஎல் ஆக்‌ஷனில் 25 கோடியை அள்ளுவார்’ - கவாஸ்கர் ஓபன் டாக்

‘ஐபிஎல் ஆக்‌ஷனில் 25 கோடியை அள்ளுவார்’ - கவாஸ்கர் ஓபன் டாக்
‘ஐபிஎல் ஆக்‌ஷனில் 25 கோடியை அள்ளுவார்’ - கவாஸ்கர் ஓபன் டாக்

ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் கபில்தேவ் விளையாடினால் அவரைக் 25 கோடி கொடுத்து ஏலத்தில் எடுப்பார்கள் என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணிக்கு முதன்முறையாக உலகக்கோப்பையை பெற்றுத் தந்த முன்னாள் கேப்டன் கபில்தேவ் மற்றும் அந்தத் தொடரில் விளையாடிய சுனில் கவாஸ்கர் ஆகியோர் தனியார் நிகழ்ச்சியில் தங்களது பொன்னான நாள்களை பகிர்ந்துகொண்டனர். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றது. உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் சரவெடியாக வெடித்தார். அந்த அதிரடியான ஆட்டம் தான் இந்திய வீரர்களுக்கு உத்வேகம் கொடுத்தது எனலாம்.இந்தப்போட்டியில் துவக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கிய கவாஸ்கர் - ஸ்ரீகாந்த் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார்கள். 

இதுகுறித்து தற்போது பேசியுள்ள கவாஸ்கர், இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர் கபில்.அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மகத்தான சாதனையை செய்துள்ளார். 1983-ம் ஆண்டு இந்திய அணி உலகக்கோப்பை வென்றது. உலகக்கோப்பை தொடரில் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் கபில் ஆடிய ஆட்டம் க்ளாசிக். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அப்படி ஒரு ஆட்டத்தை நன் பார்த்ததில்லை. ஒரு கிரிக்கெட்டராக, வர்ணனையாளராக அந்த 175 ரன்கள் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின் வரலாறாகத் தான் பார்க்கிறேன். அந்தப்போட்டியில் முதலில் 50 ரன்களை கடப்பதே சவாலாகத் தான் இருந்தது. நாங்கள் 70- 80 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகி விடுவோம் என்று தான் நினைத்தேன். ஏனெனில் நாங்கள் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தோம். அந்த சூழலில் பனியும் அதிகமாக இருந்தது. பந்துவீச்சுக்கு அது சாதகமாக இருந்தது. ஆனால் கபில் வந்ததும் நிலைமை தலைகீழாக மாறியது.

கபில் தேவ் தான் 80 ரன்களை கடக்கும்வரை அடித்து ஆடவில்லை. அதன்பின் அவரது ஆட்டம் அபாரமாக இருந்தது.அந்தப்போட்டியில் அவர் அடித்த சிக்ஸர்கள் பார்ப்பதற்கே அற்புதமாக இருந்தது. ஐபிஎல் கிரிக்கெட்தொடரில் கபில்தேவ் விளையாடினால் அவரை 25 கோடிக்கு குறையாமல் கொடுத்து ஏலத்தில் எடுப்பார்கள் என்றார். கவாஸ்கர் இவ்வாறு சொன்னதும் கபில் தனது வழக்கமான புன்னகையால் இதனை மறுத்தார். நான் அவ்வளவு பெரிய தொகையை நினைத்துக்கூட பார்த்ததில்லை என்றார். இது கபில் தேவ்வின் மதிப்பு என கவாஸ்கர் பதிலளித்தார்.

கவாஸ்கர் கூறிய அந்த பொன்னான கிரிக்கெட் தருணங்களை நாம் காண இயலாதது துரதிர்ஷ்டவசமானது. பிபிசி ஊழியர்களின் ஸ்டிரைக் காரணமாக அந்தப்போட்டி ஒளிபரப்பு மற்றும் பதிவு செய்யப்படவில்லை. கபிலின் க்ளாசிக் ஆட்டத்தைக் காண முடியாமல் போய்விட்டது.