Published:Updated:

``ஒரு புன்னகையே போதும்!’’ - கேப்டன்களுக்கு ரிக்கி பாண்டிங் அட்வைஸ்

``ஒரு புன்னகையே போதும்!’’ - கேப்டன்களுக்கு ரிக்கி பாண்டிங் அட்வைஸ்
``ஒரு புன்னகையே போதும்!’’ - கேப்டன்களுக்கு ரிக்கி பாண்டிங் அட்வைஸ்

``இந்திய ஆஸ்திரேலியே அணிகளின் கேப்டன்கள் மோதலை களத்தில் இருக்கும் நடுவர்கள் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை'' என முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன்  ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

இந்திய ஆஸ்திரேலிய அணிகள் மோதும் கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற, ஆஸ்திரேலியா இரண்டாவது போட்டியில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியது. 

கடந்த இந்தியா - ஆஸ்திரேலிய தொடர்போல் இல்லாமல், இந்தத் தொடரில் ஸ்லெட்ஜிங் அதிகமாகக் காணப்படுகிறது. கடந்த தொடர்களில் ஆஸ்திரேலிய வீரர்கள் அதிகம் வம்பிளுப்பார்கள். ஆனால், இந்த முறை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களும் ஸ்லெட்ஜிங் யுத்தியைக் கடைப்பிடிக்கிறார்கள். முதல் போட்டியில் பன்ட் கம்மின்ஸ் பேட் செய்யும்போது அவரை வம்பிளுத்தது வைரல் ஆனது. இரண்டாவது  போட்டியில் இந்த ஆக்ரோஷ மோதல் இரு அணி வீரர்களிடமும் காணப்பட்டது. குறிப்பாக ஒரு சில இடங்களில் இரு கேப்டன்களுமே ஜாலியாக மோதிக்கொண்டனர். மூன்றாவது நாளின் இறுதியில் கோலி பெய்னை வம்புக்கிளுக்க, பெய்னும் பதிலடி கொடுத்தார். நான்காம் நாளின் தொடக்கத்திலும் பெய்ன் நேரே வந்து நின்று கோலி வார்த்தைப் போரில் ஈடுபட்டார். அப்போது குறுக்கிட்ட நடுவர்கள்,  ``போதும், நிறுத்திக்கொள்ளுங்கள், விளையாட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள்” என விலக்கி விட்டார். 

இந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகத்துக்குப் பேட்டி அளித்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்,  ``அது வேடிக்கையான மோதல். இரு அணியின் கேப்டன்களும் ஜாலியாக மோதிக்கொண்டனர். களத்தில் இருக்கும் நடுவர்கள் அதில் தலையிட்டு சரி செய்தனர். ஆனால் என்னைப் பொறுத்தவரை, அது தேவை இல்லை. அது ஒரு இலகுவான மோதல்தான். 

ஒரு அணி வார்த்தை மோதலில் ஈடுபடும் முன் முதலில் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். நீங்கள் எதிரணி வீரர்களை விடச் சிறப்பாக விளையாடும்போது, ஆட்டத்தின் முக்கிய தருணத்தில் எதிரணி வீரர்களை வீழ்த்தும்போதும், முகத்தில் ஒரு புன்னைகையே போதும். முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவால் அதைச் செய்ய முடியவில்லை. ஆனால், இரண்டாவது போட்டியில் அதைச் சிறப்பாகச் செய்தனர். முதலில் சிறப்பான செயல்பாடு, அதன் பின்னர் புன்னகையே போதும்” என்றார். 

அதேபோன்று ஆஸ்திரேலியாவின் நாதன் லயன அவர் வெகுவாக புகழ்ந்தார்.  ``நாம் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் போன்ற நாட்டில் இருந்து இங்கு வரும் தரமான ஸ்பின்னர்கள் கூட இங்கு திணறுவார்கள். ஆனால், லயன் இங்கு சிறப்பாக பந்து வீசி வருகிறார். ஆடுகளத்தில் இருக்கும் கால் தடங்களை குறிவித்து வீசும் அவரது பந்துவீச்சு ஆஸ்திரேலிய அணிக்குப் பலனளிப்பதாக உள்ளது” என்றார்.