Published:Updated:

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: யுவராஜ் சிங் நீக்கம்; தினேஷுக்கு வாய்ப்பு

சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: யுவராஜ் சிங் நீக்கம்; தினேஷுக்கு வாய்ப்பு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: யுவராஜ் சிங் நீக்கம்; தினேஷுக்கு வாய்ப்பு
சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்: யுவராஜ் சிங் நீக்கம்; தினேஷுக்கு வாய்ப்பு

மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. யுவராஜ் சிங், கம்பீர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மூன்று ஆண்டுகளுக்கு பிறகு தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் அணியில் இடம் பிடித்துள்ளார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் ஜூன் 6ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை நடக்கிறது.  இந்த போட்டியில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவு ஆகிய அணிகளும் பங்கேற்கின்றன.

இந்த சாம்பியன்ஸ் கோப்பை போட்டிக்கான இந்திய அணி தேர்வு மும்பையில் இன்று நடந்தது. சந்தீப் பட்டீல் தலைமையிலான தேர்வு குழுவினர் கூடி 15 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டது.

இந்த பட்டியலில் யுவராஜ் சிங் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே அணியில் இருந்து நீக்கப்பட்ட கம்பீர், சேவாக், ஜாகீர்கான், ஹர்பஜன் சிங் ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

##~~##
தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ஷிகர் தவான், ரோகித் சர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அணி வீரர்கள் வருமாறு:
டோனி (கேப்டன்), சுரேஷ் ரெய்னா, விராட்கோலி, புவனேஷ்வர்குமார், ரோகித் சர்மா, ஷிகர் தவான், தினேஷ் கார்த்திக், முரளி விஜய், ரோகித் சர்மா,  ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், இர்பான் பதான், உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இசாந்த் சர்மா, அமீத் மிஸ்ரா, வினேய் குமார்.