Published:Updated:

``இது நம்ம DNA-விலேயே கிடையாது" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்

``இது நம்ம DNA-விலேயே கிடையாது" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்
``இது நம்ம DNA-விலேயே கிடையாது" - இந்திய அணி குறித்து சுனில் கவாஸ்கர் வருத்தம்

ஆஸ்திரேலியாவுடனான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆடிவரும் இந்திய அணி நான்காவது நாள் ஆட்டமுடிவில் 112 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது. வெற்றிக்கு இன்னும் 175 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த நிலையில், நேற்றைய ஆட்டத்தில் வார்த்தைகளால் மோதிக்கொண்டனர் இந்திய அணியின் கேப்டனான விராட் கோலியும், ஆஸ்திரேலிய அணி கேப்டனான டிம் பெயினும். அம்பயர் குறுக்கிடும் அளவுக்கு இந்த மோதல் வலுவடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் முரளி விஜய்யிடம் ``கோலி உனது கேப்டன் என்று தெரியும், அதற்காக அவரை எனக்குப் பிடிக்க வேண்டும் என்று அவசியமில்லை" என்று கூறினார். இருப்பினும் இதை ஆரம்பித்து வைத்தது கோலிதான் என்றும் இந்திய அணியின் இந்த நடத்தைச் சரியானது அல்ல என்றும் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

நேற்று இரவு தனியார் செய்தி சேனல் ஒன்றின் விவாதத்தில் பேசிய கவாஸ்கர் விராட் கோலியை கடுமையாகச் சாடினார். இப்படி ஆடுவது நம் DNA-விலேயே கிடையாது என்று கூறினார். மேலும், இந்திய அணி வீரர்கள் யாரும் ஞானிகள் கிடையாது,  இம்முறை இந்த வார்த்தைப் போரை முதலில் ஆரம்பித்தது இந்திய அணிதான். இது என்றும் நமக்கு வெற்றியைப் பெற்றுத் தராது என்றும் அவர் கூறினார். இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி இன்னும் கூடுதல் பொறுப்புடன் ஆட வேண்டும் என்று அவர் தெரிவித்தார். 

இவர் மட்டுமின்றி பலரும் இந்திய அணியின் இந்த நடத்தையை விமர்சித்து வருகின்றனர். எப்போதும் ஆஸ்திரேலியாதான் இதைப்போன்ற சர்ச்சைகளில் சிக்கும். இம்முறை மாறாக இந்திய அணி இதில் சிக்கியுள்ளது.