Published:Updated:

`நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணமில்லை!’ - விராட் கோலியைச் சீண்டிய பாலிவுட் நடிகர்

`நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணமில்லை!’ - விராட் கோலியைச் சீண்டிய பாலிவுட் நடிகர்
`நாட்டைவிட்டு வெளியேறும் எண்ணமில்லை!’ - விராட் கோலியைச் சீண்டிய பாலிவுட் நடிகர்

விராட்கோலி உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் மட்டுமல்ல அவர் உலகின் மோசமான நடத்தை கொண்ட விளையாட்டு வீரர் நடிகர் நஸ்ருதீன் ஷா விமர்சித்துள்ளார்.


இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கிரிக்கெட்டின் முந்தைய சாதனைகளை ஒவ்வொன்றாக பிரேக் செய்து வருகிறார். 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா வென்ற சரித்திரத்துக்கு விராட்டும் காரணம். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், தனது 25-வது சதத்தைப் பதிவு செய்தார். இதன்மூலம் குறைந்த போட்டிகளிலே 25 சதங்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். உலகின் முன்னணி பேட்ஸ்மேனாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறார் விராட் கோலி. பேட்ஸ்மேனாக பாராட்டு மழையில் நனையும் விராட் கோலி, தான் கூறும் கருத்துகளால் சர்ச்சையில் சிக்குவதுண்டு.

சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளித்த விராட், ``வெளிநாட்டு வீரர்களைப் பிடித்திருந்தால் ஏன் இந்தியாவில் இருக்கிறீர்கள் வேற நாட்டுக்குச் சென்றுவிட வேண்டியது தானே' என்று பதிலளித்தார். விராட் கோலியின் இந்தக் கருத்து பொறுப்பற்ற தன்மையைக் காட்டுவதாகக் கடுமையான விமர்சனத்துக்கு உள்ளானர். 

இந்த நிலையில், பாலிவுட் நடிகர் நஸ்ருதீன் ஷா, விராட் கோலியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இதுகுறித்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள அவர்,` `விராட் கோலி உலகின் மிகச்சிறந்த  கிரிக்கெட் வீரர் மட்டுமல்ல. உலகின் மோசமான நடத்தை கொண்ட வீரர் கூட. அவரது திறமையான விளையாட்டு என்பது அவரது அகந்தை மற்றும் கெட்ட நடத்தைகளால் மறைந்து விடுகிறது'' என்று பதிவிட்டுள்ளார். மேலும், கோலி ரசிகருக்கு அளித்த பதிலை கிண்டலடிக்கும் வகையில், `எனக்கு நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணமில்லை' என்று அவர் பதிவிட்டுள்ளார்.