Published:Updated:

ஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND

ஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND
ஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND

பெர்த் மைதானத்தில் இன்று தொடங்கும் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் முதலில் பேட் செய்ய முடிவு செய்துள்ளார்.

ஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND

Photo Credit: BCCI

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. முதலாவது டெஸ்ட் போட்டியில் வெற்றிபெற்ற இந்தியா, 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில், இன்று 2-வது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது. வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான ஆடுகளத்தில் சாதிக்கும் முனைப்புடன் இரு அணிகளும் களமிறங்கவுள்ளது. பிட்ச் முழுவதும் புற்களாக காட்சி அளிப்பதால், இரண்டு அணியின் வேகப்பந்து வீச்சாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஸ்பின்னர் இல்லாத இந்திய அணி - டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு #AUSvIND

Photo Credit: BCCI
 

இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இந்திய அணியில் அஷ்வின் மற்றும் ரோகித் ஷர்மா காயம் காரணமாக நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, ஹனும விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தப் போட்டியில் இந்திய அணி ஆஸ்தான ஸ்பின்னர் இல்லாமல் களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. போட்டி இந்திய நேரப்படி காலை 7.50 மணிக்குத் தொடங்குகிறது.