Published:Updated:

ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 7வது வெற்றி

ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 7வது வெற்றி
ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 7வது வெற்றி
ஐ.பி.எல்: பெங்களூர் அணிக்கு 7வது வெற்றி

புனே: புனேவில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட்டில் புனே வாரியர்ஸ் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீழ்த்தி 7வது வெற்றியை ருசித்தது.

புனேயில் நேற்றிரவு நடந்த 46வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்- புனே வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூர் அணியில் களம் இறங்கிய அனைத்து வீரர்களும் கணிசமான பங்களிப்பை அளித்தனர்.

தொடக்க ஆட்டக்காரர் கிறிஸ் கெய்ல் 21 ரன்களும், கேப்டன் விராட் கோலி 25 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சவுரப் திவாரி 52 ரன்கள் எடுத்தார். இதைத் தொடர்ந்து டிவில்லியர்ஸ், புனே பந்து வீச்சை சிதறடித்தார்.

முடிவில் பெங்களூர் அணி 3 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. டிவில்லியர்ஸ் 23 பந்துகளில் 50 ரன்களும், ஹென்ரிக்ஸ் 27 ரன்களும் விளாசி ஆட்டம் இழக்காமல் இருந்தனர். புனே தரப்பில் திண்டா 2 விக்கெட் வீழ்த்தினார்.

பின்னர் விளையாடிய புனே அணியில் தொடக்க ஆட்டக்காரர் உத்தப்பா மட்டும் நிலைத்து ஆடினார். யுவராஜ்சிங் (16) உள்ளிட்ட மற்றவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பெவிலியன் திரும்பினர்.

##~~##
உத்தப்பாவும் (75), மேத்யூசும் (32) களத்தில் நின்ற வரை புனே அணிக்கு வெற்றி வாய்ப்பு தென்பட்டது. அவர்கள் வெளியேறியதும் வீழ்ந்து போனது. புனே அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 170 ரன்கள் எடுத்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
11வது ஆட்டத்தில் ஆடிய பெங்களூர் அணிக்கு இது 7வது வெற்றியாகும். 11வது ஆட்டத்தில் விளையாடி 9வது தோல்வியை தழுவிய புனே அணி அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டது.