Published:Updated:

`இஷாந்த் ஷர்மாவுக்கு சாதகமான அம்பயர்; ரிவ்யூவில் தப்பிய பின்ச்’- பாண்டிங் விளாசல்

`இஷாந்த் ஷர்மாவுக்கு சாதகமான அம்பயர்; ரிவ்யூவில் தப்பிய பின்ச்’- பாண்டிங் விளாசல்
`இஷாந்த் ஷர்மாவுக்கு சாதகமான அம்பயர்; ரிவ்யூவில் தப்பிய பின்ச்’- பாண்டிங் விளாசல்

களநடுவர்கள் சரியாகச் செயல்படுவதில்லை என ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார்.


இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அடிலெய்டில் நடைபெற்று வருகிறது. நான்காம் நாளான இன்று பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது.  முதல் இன்னிங்ஸில்  ஆஸ்திரேலிய வீரர்களை கலங்கடித்த இஷாந்த ஷர்மா  முதல் ஓவரை வீசினார். இஷாந்து வீசிய இரண்டாவது பந்தில் ஆரோன் பின்ச் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவரும் பின்ச்  அவுட் ஆனதாக அறிவித்தார். ஆஸ்திரேலியா தரப்பில் மூன்றாவது நடுவரிடம் முறையிடப்பட்டது. ரீப்ளேயில் இஷாந்த் ஷர்மா பந்துவீசும் போது கிரீஸை விட்டு சில இன்ச்-கள் காலை வெளியில் வைத்தது தெரியவந்தது. இதனால் பின்ச் கண்டத்தில் இருந்து தப்பினார். இருந்தும் அவர் நீண்ட நேரம் நிலைக்கவில்லை 11 ரன்கள் எடுத்தநிலையில் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆகி வெளியேறினார்.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்துள்ள ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன்  ரிக்கி பாண்டிங், “ களநடுவர்கள் தங்கள் முன்னால் இருக்கும் கோடுகளை கவனிப்பதே இல்லை. பல வருடங்களாக இப்படி தான் நடக்கிறது. அதற்குச் சான்று இன்றைய போட்டியில் பின்ச்-க்கு  விக்கெட் வழங்கியது. இஷாந்தின் கால்கள் கோடுகளை விட்டு 4-6 இன்ச் வெளியில் இருந்தது. சமீப காலமாக ரீவ்யூ கேட்டுத் தான் நோபாலை தெரிந்துகொள்ளமுடிகிறது”எனத் தெரிவித்துள்ளார்.

இந்தப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இஷாந்த் ஷர்மா வீசிய மூன்றாவது பந்தில் ஆரோன் பின்ச் க்ளின் போல்டு ஆனது குறிப்பிடத்தக்கது. இந்த விக்கெட்டை கோலி கொண்டாடிய விதம் குறித்து ஆஸ்திரேலியா பயிற்சியாளர் லாங்கர் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று பாண்டிங் நடுவரின் தவறு குறித்து பேசியுள்ளார்.