Published:Updated:

ஐ.பி.எல்: டெல்லிக்கு 3வது வெற்றி; கொல்கத்தாவுக்கு 7வது தோல்வி

ஐ.பி.எல்: டெல்லிக்கு 3வது வெற்றி; கொல்கத்தாவுக்கு 7வது தோல்வி
ஐ.பி.எல்: டெல்லிக்கு 3வது வெற்றி; கொல்கத்தாவுக்கு 7வது தோல்வி
ஐ.பி.எல்: டெல்லிக்கு 3வது வெற்றி; கொல்கத்தாவுக்கு 7வது தோல்வி

ராய்பூர்: ராய்பூரில் நேற்றிரவு நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லில டேர்டெவில்ஸ் அணி வீழ்த்தி 3வது வெற்றி பெற்றது. அதே சமயம் கொல்கத்தா அணிக்கு இது 7வது தோல்வியாகும்.

ராய்பூரில் நடந்த 44வது லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் கவுதம் கம்பீரும், பிஸ்லாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் கண்டனர்.

முதல் ஓவரில், 2வது பந்தில் கம்பீர் ரன்அவுட் ஆனார். டக் அவுட் ஆன கம்பீர் பரிதாபமாக வெளியேறினார். பிஸ்லாவும்  தாக்குப் பிடிக்க முடியாமல் 4 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதைத் தொடர்ந்து சில நிமிடங்கள் வேடிக்கை காட்டிய யூசுப் பதான் 20 ரன்னில் பௌவிலியன் திரும்பினார். பின்னர் வந்த மோர்கன் (10), காலிஸ் (12) ஆகியோரும் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தனர். 10 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 50 ரன்களுடன் திணறிய கொல்கத்தா அணிக்கு பின்வரிசை வீரர்கள் கைகொடுத்தனர்.

டெபப்ரதா தாஸ் (18), ரஜத் பாட்டியா (26), நார்வல் (23), பிரெட்லீ (16) ஆகியோர் இரட்டை இலக்கு எட்டினர். இதனால் கொல்கத்தா அணி 20 ஓவர்களில் அந்த அணி 7 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் எடுத்தது.டெல்லி தரப்பில் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளும், இர்பான் பதான், நெஹரா, மோர்னே மோர்கல், நதீம் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

137 ரன்கள் இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ஷேவாக்கும் (17), கேப்டன் மஹேலா ஜெயவர்த்தனேவும் (5) அடுத்தடுத்து வீழ்ந்தனர்.

##~~##
இதைத் தொடர்ந்து உன்முக் சந்தும், டேவிட் வார்னரும் ஜோடி சேர்ந்து டெல்லி அணியை சரிவில் இருந்து காப்பாற்றினர். ஒரு பக்கம் டேவிட் வார்னர் அதிரடி காட்டினார். அணியின் ஸ்கோர் 122 ரன்களை எட்டிய போது, உன்முக் சந்த் 37 ரன்னில் ஆட்டம் இழந்தனர். அடுத்து வந்த பென் ரோரர் சிக்சர் அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். இதனால் டெல்லி அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டேவிட் வார்னர் 66 ரன்களுடனும், ரோரர் 10 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
10வது ஆட்டத்தில் ஆடிய டெல்லி அணிக்கு இது 3வது வெற்றியாகும். அதே சமயம் கொல்கத்தா அணிக்கு இது 7வது தோல்வியாகும்.