
ஐ.பி.எல்: சன் ரைசர்ஸிடம் சரணடைந்தது மும்பை இந்தியன்ஸ்

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் ஹைதராபாத் சன் ரைசர்ஸ் வீழ்த்தியது.
ஹைதராபாத்தில் நேற்று மாலை நடந்த 43வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - ஹைதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங் செய்தது.
தொடக்க வீரர் சச்சின் 14 ரன் எடுத்திருந்தபோது இஷாந்த் ஷர்மாவின் பந்தி்ல் போல்டு ஆனார். அடுத்து வந்த தினேஷ் கார்த்திக்கும் (0) அதே ஓவரில் ஆட்டம் இழந்தார்.
இஷாந்த் ஷர்மா, அமித் மிஸ்ரா ஆகியோர் மும்பை அணிக்கு நெருக்கடி கொடுத்தனர். இதனால் மும்பை அணியால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக வெய்ன் ஸ்மித் 38 ரன்கள் எடுத்தார்.
130 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்கை நோக்கி ஆடிய ஹைதராபாத் அணி தொடக்க ஆட்டக்காரர் அக் ஷாத் ரெட்டி (7), கேப்டன் சங்கக்கரா (21) ஆகியோரின் ஆட்டம் இழந்தாலும், மற்றொரு தொடக்க வீரர் ஷிகர் தவானும், விஹாரியும் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.
##~~## |