Published:Updated:

பெவிலியன்

பெவிலியன்
பிரீமியம் ஸ்டோரி
பெவிலியன்

பெவிலியன்

பெவிலியன்

பெவிலியன்

Published:Updated:
பெவிலியன்
பிரீமியம் ஸ்டோரி
பெவிலியன்
பெவிலியன்

விராட் டாட்டூக்களின் லவ்வர். தனது நட்சத்திரம், பெற்றோர் பெயர்கள், தியானத்தில் இருக்கும் சிவன் என்று பலவற்றில் அவருக்குப் பிடித்த டாட்டூ, இடது கையில் அவர் பதிந்திருக்கும் வாளுயர்த்தி இருக்கும் சாமுராய் டாட்டூதான்.

பெவிலியன்

வான் ஸ்லிப்பில் இருக்கும்போது டென்ஷனைக் குறைக்க அம்ஜத்கான் ‘ஷோலே’வில் பேசிய வசனங்களை சொல்லிக்கொண்டே இருப்பார். ‘ஷோலே’ படத்தின் அம்ஜத்கானின் பெயர் கப்பார். அதுவே தவானின் நிக் நேம்
ஆகிவிட்டது.

பெவிலியன்
பெவிலியன்

கே.எல்.ராகுல் ஃபுட்பால் ப்ரியர். ஐ.பி.எல் தொடரின்போது பாண்டியாவுடன் ஜெர்சியை மாற்றிக்கொண்டது, கடந்த டெஸ்ட் போட்டியில் 'டெலே சேலஞ்ச்' செய்து விக்கெட்டைக் கொண்டாடியது என கால்பந்து வீரர் போலவே களத்தில் நடந்துகொள்கிறார் ராகுல்.

பெவிலியன்

ரோஹித் தீவிர முட்டைப் பிரியர்.  ஒருமுறை ‘45 முட்டைகள் சாப்பிடும் சேலஞ்சி’ல் இலங்கை பௌலர்களை டீல் செய்வதுபோல் ஜஸ்ட் லைக் தட் பந்தயத்தை வென்றுள்ளார் ஹிட்மேன்!

பெவிலியன்

சிறுவயதில் காலை உணவு, மதிய உணவு என 365 நாட்களும் 5 ரூபாய் மேகிதான் என்கிறார் ஹர்திக் பாண்ட்யா. இப்போது லேண்ட் ரோவர் காரில் பயணித்துக்கொண்டிருக்கிறது இந்த இளம் புயல்.

பெவிலியன்

ளத்தில் ரொம்பவே அமைதியாக இருக்கும் ரஹானே கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருக்கிறார். லம்போர்கினி, ஆஸ்டன் மார்ட்டின் கார்கள் வாங்குவதுதான் அ'ஜிங்ஸ்'ன் வாழ்நாள் லட்சியமாம்!

பெவிலியன்

வெளியே அமைதியானவர் என்று பெயரெடுத்த பும்ரா, களத்திலிறங்கிவிட்டால் புலயாகிவிடுவார். கிரிக்கெட் கரியரிக்குள் வரும் முன்,கனடாவில் செட்டில் ஆகவேண்டும் என்பதுதான் அவரின் கனவாக இருந்தது.

பெவிலியன்

ப்படியாவது இந்திய ராணுவத்தில் சேர்ந்துவிடவேண்டும் என்கிற லட்சியத்தோடு இருந்தவர் புவனேஷ்குமார். ஆனால் கிரிக்கெட் அவரை பற்றிக்கொள்ள முழுநேர கிரிக்கெட் வீரர் ஆகிவிட்டார். கார்ட்டூன்கள் பார்ப்பதில் ஆர்வம் அதிகமுள்ள புவனேஷ்குமாருக்கு பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரம் சோட்டா பீம்! 

பெவிலியன்

வாள்வீச்சும் குதிரையேற்றமும் தெரிந்தவர் ரவீந்திர ஜடேஜா. தன்னுடைய பண்ணைவீட்டில் இரண்டு குதிரைகளை வளர்த்து வருகிறார். தனக்கு மிகவும் பிடித்த குதிரையான லால்பீரின் படத்தை கையில் பச்சை குத்திக்கொண்டிருக்கிறார் ஜட்டு!

பெவிலியன்

கிரிக்கெட்டில் மட்டுமல்ல மற்ற விளையாட்டுகளையும் ஆர்வத்தோடு பின்தொடர்பவர் அஸ்வின். கால்பந்தாட்ட வீரர் மரடோனாவின் ரசிகர். கால்பந்தாட்ட அணி என்றால் ஸ்பெயின்தான்! டென்னிஸ் போட்டிகளையும் ஒன்றுவிடாமல்  பார்த்துவிடுவதும் அஸ்வினுடைய வழக்கம். நோவாக் ஜோகோவிக்கின் ரசிகர்.