

ஜெய்ப்பூரில் நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீழ்த்தியது.
ஜெய்ப்பூர் சவாய்மான்சிங் மைதானத்தில் நேற்று மாலை நடந்த 40வது லீக் ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் டிராவிட், பெங்களூர் அணியை முதலில் பேட்டிங் செய்ய அழைத்தார்.
தொடக்க ஆட்டக்காரர்களாக அபினவ் முகுந்த், அதிரடி மன்னன் கெய்ல் களம் இறங்கினர். அஜித் சண்டிலா வீசிய முதல் ஓவரிலேயே கெய்ல் 3 பவுண்டரிகள் விளாசினார். 3வது ஓவரில் ஸ்ரீசாந்த் பந்து வீச்சில் கெய்ல் 2 பவுண்டரியும், ஒரு சிக்சரும் பறக்கவிட்டார்.
மறுமுனையில் அபினவ் முகுந்த் நிதானமாக விளையாடினார். அதிரடியாக விளையாடிய கெய்ல் 16 பந்துகளில் 6 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 34 ரன் எடுத்த நிலையில் ஷேன் வாட்சன் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் சாம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அடுத்து களம் இறங்கிய கேப்டன் விராட்கோலி, ராஜஸ்தான் பந்து வீச்சில் ரன் எடுக்க திணறினார். தொடக்க ஆட்டக்காரர் அபினவ் முகுந்த் 19 ரன் எடுத்திருந்தபோது திரிவேதி பந்தில் ஆட்டம் இழந்தார்.
பி்ன்னர் வந்த, டி வில்லியர்ஸ், விராட்கோலியுடன் ஜோடி சேர்ந்தார். 21 ரன் எடுத்திருந்த டி வில்லியர்ஸ் , ஸ்ரீசாந்த் பந்தில் ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து ஹென்ரிக்ஸ் களம் இறங்கினார். கேப்டன் விராட்கோலி 32 ரன் எடுத்திருந்த போது ஷேன் வாட்சன் பந்தில் ஆட்டம் இழந்தார்.
இதைத் தொடர்ந்து ஹென்ரிக்ஸ் 22 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த ரவிராம்பால் 3 ரன்னில் திரும்பினார். கடைசி ஓவரில் களம் கண்ட வேகப்பந்து வீச்சாளர் வினய்குமார், பவுல்க்னெர் வீசிய அந்த ஓவரில் 3 சிக்சருடன் 22 ரன்கள் சேர்த்தார்.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் எடுத்தது. சவுரப் திவாரி 8 பந்துகளில் 8 ரன்னும், வினய்குமார் 6 பந்துகளில் 3 சிக்சருடன் 22 ரன்னும் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தனர். ராஜஸ்தான் அணி தரப்பில் ஷேன் வாட்சன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரஹானே (2), கேப்டன் டிராவிட் (22) ஆகியோர் இழந்தாலும், 3வது விக்கெட்டுக்கு ஷேன் வாட்சன், விக்கெட் கீப்பர் சாம்சனுடன் ஜோடி சேர்ந்தது. இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
சாம்சன் 32 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்சருடன் முதல் அரை சதத்தை எட்டினார். அணியின் ஸ்கோர் 14.2 ஓவர்களில் 116 ரன்னாக இருந்த போது அதிரடியாக விளையாடிய சாம்சன் 63 ரன்னில் வீழ்ந்தார். அடுத்து வந்த பிராட்ஹாட்ஜ் தன் பங்குக்கு அதிரடி காட்டினார். அணியின் ஸ்கோர் 162 ரன்னை எட்டிய போது ஷேன் வாட்சன் 41 ரன்னில் அவுட் ஆனார்.
##~~## |