Published:Updated:

 ஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC

 ஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC
 ஐசிசி டி20 தரவரிசையில் 20 இடங்கள் முன்னேறிய குல்தீப், 66 இடங்கள் முன்னேறிய குருணால் #ICC

ஐ.சி.சி-யின் சர்வதேச டி20 போட்டியில் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்தியாவின் குல்தீப் யாதவ் 20 இடங்கள் முன்னேறியுள்ளார். 

சர்வதேச டி20 போட்டிகளுக்கான ஐ.சி.சி தரவரிசைப் பட்டியல் இன்று துபாயில் வெளியிடப்பட்டது. அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிவடைந்தது. இந்த ஆட்டத்தில் வீரர்களின் செயல்பாடுகள் தரவரிசைப் பட்டியலில் பிரதிபலித்துள்ளது. 

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். சிறப்பாகப் பந்துவீசிய குல்தீப்  தரவரிசைப் பட்டியலில் 20 இடங்கள் முன்னேறி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இந்தியாவின் ஆஸ்தான  சுழற்பந்து வீச்சாளராக வலம் வரும் இடக்கைப் பந்து  வீச்சாளரான குல்தீப் முதல் முறையாக டாப் 5-க்குள் முன்னேறியுள்ளார். 

ஆஸ்திரேலியா அணியின் ஆடம் சம்பாவும் 17 இடங்கள் முன்னேறி 5-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்திய அணியின் குருணால் பாண்ட்யா, மூன்றாவது டி20 போட்டியில் 4 விக்கெட்டுகள் சாய்த்தார். இதன்மூலம் அவரும் டி20 தரவரிசைப் பட்டியலில் 66 இடங்கள் முன்னேறி 98-வது இடத்தில் உள்ளார். 

பேட்டிங்கை பொறுத்தவரை, தவான் 5 இடங்கள் முன்னேறி 11-வது இடத்தில் உள்ளார். இந்திய கேப்டன் கோலி, 14-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ஒரு இடம் முன்னேறி 5-வது இடத்தில் இருக்கிறார்.  

டி20 போட்டிகளுக்கான அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்திலும், இந்தியா இரண்டாம் இடத்திலும் உள்ளன. டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.